உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / இது இருந்தால் போதும்

இது இருந்தால் போதும்

பப்பியின் கால், உடல் பகுதியில், எங்கேயாவது அடிப்பட்டாலோ அல்லது, அரிப்பு, எரிச்சல் இருந்தாலோ, எந்நேரமும் அப்பகுதியை எச்சில் வைத்து, நாக்கால் நக்கி கொண்டே இருக்கும். அறுவை சிகிச்சை ஏதேனும் செய்திருந்தால், அப்பகுதியில் வலி ஏற்பட்டால், கடிக்க துவங்கிவிடும். இதனால், காயம் ஆற தாமதம் ஆகலாம். அச்சமயங்களில், பப்பிக்காக கழுத்தில் மாட்டிவிடும், மெத்தை போன்ற காலர் பொருத்திவிட்டால் போதும்.பிறந்த குழந்தைகளை துாங்க வைக்கும் போது, தலைப்பகுதியில் வைப்பது போன்ற வடிவமைப்பில், இக்காலர் இருக்கும். இதை, பப்பியின் கழுத்தில் மாட்டிவிட்டால், பப்பி சமத்தாக இருக்கும். காட்டன் துணியில் இந்த காலர் தயாரிப்பதால், வெயில் காலத்திலும் கழுத்தில் மாட்டிவிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !