உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / இது சூப்பர் ஸ்டைலு தான்!

இது சூப்பர் ஸ்டைலு தான்!

பூ டில் பப்பிக்கு, உடல் முழுக்க சுருள் சுருளாக முடி இருப்பதோடு வெள்ளை, பிரவுன், கருப்பு நிறங்களில் காணப்படுவதால், பலரும் இதை செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். இதற்கு, 11 வகையான, 'ஹேர் கட் ஸ்டைல்' உள்ளது. இதில், அமெரிக்கன் கென்னல் கிளப்பால் அங்கீகரிக்கப்பட்ட பிரபல, 'இங்கிலிஷ் சேடில் கட்' (English Saddle Cut) செய்து செல்பி எடுத்து அசத்துங்க. இந்த ஹேர் ஸ்டைலில் முகம், வாலின் அடிப்பகுதி, பாதங்களில் உள்ள முடி முற்றிலும் நீக்கப்படும். இது, பப்பியின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலுக்கு இணையான அளவில், பின்னங்காலில் மட்டும் இரு இடங்களில், சிறிதளவு முடி முழுமையாக நீக்கி, உருளையாக இருக்கும் வகையில், முடியை வெட்டிவிடுவர். வால், உடல் முழுக்க பொம்மை மாதிரி முடியை சீராக வெட்டிவிட்டு, உங்க பப்பியை ஸ்டைல் ஆக்கலாம். கண்காட்சிகளில் போட்டிக்கு பங்கேற்க வைக்கும் போது, போட்டோஷூட் எடுக்கும் போது, இதுபோன்ற ஹேர்கட் செய்து அசத்துங்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ