* மடகாஸ்கரில், முள்ளெலி போன்ற 'டென்ரெக்'குகளை வளர்க்கின்றனர்.* காண்டாமிருக வண்டுகள், கடிக்காது, குத்தாது என்பதால், ஜப்பானியர்கள் அதிகம் வளர்க்கின்றனர்.* கென்யாவில் 'டிக்-டிக்ஸ்' என்ற சிறிய வகை மான்களை, பலரும் வளர்க்கின்றனர்.* ஐக்கிய அரபு எமிரேட்ஸில், பருந்துகளை வளர்க்கலாம். இவற்றுடன் பயணிக்க, பிரத்யேக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.* இந்தோனேஷியா தீவுகளில், 80 உடும்பு இனங்கள் உள்ளன.* சிலி நாட்டில் வாழும் கொறித்துண்ணியான 'டெகு', குழுவாக வாழும்; வித்தியாசமாக ஒலி எழுப்பும்.விலங்குகளின் வினோதம்
* பண்டைய எகிப்தியர்கள், இறந்த பூனை உடலை பதப்படுத்தி, சவப்பெட்டியில் பாதுகாத்தனர்.* மெக்சிகோவை சேர்ந்த ஆக்சோலோட்ல், உறுப்புகளை இழந்தால் மீள் உருவாக்கம் செய்து கொள்ளும்.* அரிய பறவை இனமான நிக்கோபர் புறாவை, வீட்டில் வளர்க்க, இந்தியஅரசு தடை விதித்துள்ளது.* செல்லப்பிராணிகளை குளோனிங் தொழில்நுட்பத்தால் உருவாக்குவதில், தென்கொரியா முன்னோடி.* 2024ல், அமெரிக்காவில், செல்லப்பிராணிகளுக்கான காப்பீடு சந்தையின் மதிப்பு ரூ.500 கோடி.* செல்லப்பிராணிகள் இறந்தால், இரண்டு நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க, கொலம்பியாவில் சட்டமே உள்ளது.திரைப்படங்கள்
தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்:ரகு என்ற அனாதை குட்டியானை அதை வளர்க்கும் பழங்குடியின தம்பதி பற்றிய ஆவண குறும்படம்; 2023ல் ஆஸ்கார் விருது வென்றது.ஹாச்சி: ஒரு நாயின் கதைஜப்பானில் எஜமான் இறந்தது தெரியாமல், 10 ஆண்டுகளாக ரயில் நிலையத்தில் காத்திருந்த அகிதா இன நாய் பற்றிய படம்.தி சீக்ரெட் லைப் ஆப் பெட்ஸ்:உரிமையாளர் வீட்டில் இல்லாத போது, செல்லப்பிராணிகள், சந்திக்கும் பிரச்னைகள் பற்றி பேசும் கற்பனைக்கதை.கேடி:தெருக்களில் சுற்றித்திரியும் பூனை, அங்கு வசிக்கும் மனிதர்களுடன் எப்படி உறவாடுகிறது என்பதை விவரிக்கும் ஆவணப்படம்.மார்ச் ஆப் தி பென்குயின்:பென்குயின்கள் கடலில் இருந்து நிலப்பகுதிக்கு வந்து, இனப்பெருக்கம் செய்து, தன் வாரிசுகளை வளர்க்கும் பயணத்தை கூறும், ஆவணப்படம்.இது குரைக்காது
* மனித கை ரேகை போல ஒவ்வொரு நாய்க்கும், மூக்கின் முகடு, மடிப்புகளில் சிக்கலான தனித்துவ வடிவங்கள் இருக்கும். கனடியன் கென்னல் கிளப், 1938ல் இருந்து அடையாள சான்றாக இதை ஏற்கிறது.* டால்மேஷன் இன பப்பிகள் பிறந்து இரு வாரங்களுக்கு பிறகே உடலில் கறுப்பு, பழுப்பு நிற புள்ளிகள் தோன்றஆரம்பிக்கின்றன.* உலகிலேயே குரைக்காத நாய் இனம் பாசென்ஜி. ஒருவித ஒலி எழுப்புதல், உறுமுதல், உடல் மொழி மூலம், தன் உணர்வுகளை வெளிப்படுத்தும்.* 'செள-செள' மற்றும் 'ஷார் பே' நாய் இனங்களுக்கு மட்டுமே, நாக்கு கறுப்பு- நீல நிறத்தில் இருக்கும்.