உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா...மித்ரா (திருப்பூர்) / அற நெறி பெண் அதிகாரிகள்; கொல வெறி ஊழல் திமிங்கிலங்கள்

அற நெறி பெண் அதிகாரிகள்; கொல வெறி ஊழல் திமிங்கிலங்கள்

''மித்து... டீ, காபி கூட, குடிக்கக்கூடாதுன்னு ஸ்டிரிக்டா சொல்லீட்டாங்களாம்''''சித்ராக்கா... யாருக்கா?''''ஊழியர்களோ, ஆபீசர்ேஸா யார்ட்டயும் கைநீட்டக்கூடாது... தெரிஞ்சா, நடவடிக்கை பாயும்னு 'விழிமலர்' மேடம் 'வார்ன்' பண்ணீட்டாங்க...''ஊரக வளர்ச்சில லஞ்சத்துக்குக் குறைவிருக்காது... ஆனா, இப்படி ஒரு 'நேர்மை' ஆபீசரான்னு பலரும் வியக்கிறாங்களாம்''''சொல்றதக் கேட்டாலே மனசு 'குளுகுளு'ங்குதுக்கா... இந்த மாதிரி ஆபீசர்ைஸ விட்டுவைக்க மாட்டாங்களே...''மித்ரா கவலைப்பட்டாள்.''சித்ராக்கா... சின்ன வியாபாரிகள் மேல நடவடிக்கை எடுக்கறாங்க... ஆனா குட்கா விக்கிற மொத்த வியாபாரிகளான 'திமிங்கிலங்களை' விட்டு வைக்கிற தகவல் போலீஸ் கமிஷனர் காதுக்குப் போயிருக்கு... உணவுப்பாதுகாப்புத் துறையினரோட இப்ப போலீஸ் அதிகாரிகளுங்களும் சேர்ந்து மொத்த வியாபாரிகளையும் 'ரவுண்ட்' கட்டறாங்க...''பக்கத்து ஸ்டேட்ல இருந்து குட்காவோட நுழையற வாகனங்களை 'ஸ்கெட்ச்' போட்டு துாக்கறாங்களாம். இதில் இருந்து தப்பிக்க மொத்த வியாபாரிகள், பயங்கரமா காய் நகர்த்திட்டு வர்றாங்களாம்...''நேர்மையா இருக்கிற பெண் அதிகாரிங்க மேல, லஞ்சம் வாங்குற ஆளுங்க, தகிடுதத்தம் பண்ற ஆசாமிங்க 'கொல வெறி'ல இருக்காங்களாம்''மித்ரா விவரித்தாள்.மது பதுக்கல் 'நெட்வொர்க்'''சித்ராக்கா... மதுக்கடை மூடுறப்ப, சும்மா பேருக்கு கேஸ் போடுவாங்க... இந்தத் தடவை உயரதிகாரி காதுக்குத் தகவல் போனவுடனே, ஒரே இடத்துல 1500 பாட்டில் பிடிச்சாங்களாம்''''மித்து... சிட்டி 'புல்'லா ரெய்டு நடத்தியிருந்தா, ஏகப்பட்ட பாட்டில் சிக்கியிருக்கும் போல. ஒருத்தரே இவ்வளவு பாட்டில் வாங்கி 'ஸ்டாக்' வச்சிருக்கார்னா, இதுல பெரிய 'நெட்வொர்க்'கே செயல்படும் போலயே''''நீங்க சொல்றது கரெக்ட்க்கா... சிட்டில எங்க பார்த்தாலும் வாகனத்தணிக்கை செஞ்சு போலீசார் 'பைன்' போடறாங்க... ஆனா, போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயம் இருக்கிற இடத்தில, ஒரே இடத்தில அடுத்தடுத்து போலீசார் மெஷினை கையில் வச்சு நின்னுட்டு இருக்காங்க.''எஸ்.ஐ., இல்லாமலே, ஏட்டு உள்பட போலீசார் கையில எல்லாம் மெஷினை கொடுத்துடுறாங்க... இதென்ன நல்லாவா இருக்கு''''நீ சொல்றது கரெக்ட்தான் மித்து... கடந்த வாரம் குற்றப்பிரிவுல போலீஸ் பற்றாக்குறைன்னு பேசீட்டு இருந்தோம்ல... இது உயரதிகாரி காதுக்குப் போனவுடனே, ஸ்டேஷனுக்குத் தற்காலிகமாக ஒன்னு, ரெண்டு பேரை அனுப்பியிருக்காங்களாம்...''வேறு பணிகளுக்கு ஏ.ஆர்., போலீஸ்காரங்களைப் பயன்படுத்துங்கன்னு அட்வைஸ் பண்ணியிருக்காங்க,''''சூப்பர்ப் அக்கா...''மகிழ்ந்தாள் மித்ரா.இதுக்கெல்லாமா 'சப்போர்ட்?'''மித்து... கடந்த வாரம் 'நாசிஅவி' பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியோட பெற்றோர், ஒரு 60 வயசு ஆசாமிய பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதா புகார் தந்தாங்களாம்.''ஆனா 'கருணை' பெயர் கொண்ட தேசியக் கட்சி கவுன்சிலரும், 'கண்ணனா' இருக்கிற ஆளும்கட்சிப் பிரமுகரும் அந்த ஆசாமிக்கு 'சப்போர்ட்'டா களத்துல குதிச்சு எப்.ஐ.ஆர்., போடாம பார்த்துட்டாங்களாம்...''அக்கா... நல்லா இருக்கே நியாயம்''மித்ரா ஆதங்கப்பட்டாள்.''சித்ராக்கா... சமீபத்துல 'பாளையம்ஆண்டி' பகுதில நடந்த பள்ளித் திறப்பு விழாவுக்கு தெற்கு ஆளும் கட்சிப் பொறுப்பாளரும், மண்டலமும் கலந்துட்டாங்களாம்... இவங்களோட எடுபிடிங்க அதிகாரிகளோட வாகனத்தில முன்னால உக்காந்து அலப்பறை பண்ணியிருக்காங்க... ஆளும்கட்சியோட பேரைக் கெடுக்கறதுக்கு இவங்களே போதும்னு பலரும் தலைல அடிச்சிக்கிட்டாங்களாம்''''மித்து... அணைப்பாளையம் ரயில்வே பாலம் பணி கிடப்புல இருக்குதுல்ல... எம்.பி., - மினிஸ்டர் ஆய்வு செய்யறதா 'பிளக்ஸ்' பேனர்ல வச்சிருந்தாங்களாம். ஆனா, மினிஸ்டரோ, அதிகாரிங்களோ வரல...''எம்.பி.,யும், துணை மேயரும் மட்டும் போயிருக்காப்ல... இந்த ஆய்வுன்னால என்ன 'யூஸ்'ன்னு தெரியல''''சித்ராக்கா... போன வாரம், முதல், ரெண்டாவது மண்டலத்தைச் சேர்ந்த அதிகாரிங்க, ஒரு மண்டபத்தில ஆடி கிடா விருந்து வச்சாங்க. மூனு, நாலாவது மண்டல அதிகாரிங்களும் சளைச்சவங்களா... என்ன... இவங்களும் தடபுடலா கிடா விருந்து வச்சிருக்காங்க...''''நமக்கு யாரும் இந்த மாதிரி விருந்துக்குக் கூப்பிட மாட்டீங்கறாங்களே, மித்து''சித்ரா நகைத்தாள்.''மித்து... குறுமையப்போட்டிகளை 'லீவு' நாளான சனிக்கிழமை நடத்துனா, ஆசிரியர்களோ, பிற மாணவர்களோ பார்க்க வர்றதில்ல. சனிக்கிழமை நடத்த வேண்டாம்னு சி.இ.ஓ., சொல்லீட்டாங்களாம்.''இதனால அன்னிக்கு நடத்துறதா இருந்த போட்டியையெல்லாம் தள்ளிவச்சிட்டாங்களாம்''''அக்கா... சமீபத்துல குறுமைய கூடைப்பந்து போட்டில பாயின்ட் வழங்குறதுல முறைகேடு நடந்ததா ஒரு பள்ளி அணியோட கேப்டன் கூற, நடுவருக்கும், தனியார் பள்ளி பயிற்சியாளருக்கும் சண்டை வந்திடுச்சாம். மாவட்ட விளையாட்டு அதிகாரிதான் சமாதானம் செஞ்சு வச்சிருக்கார்''ரேஷன் அரிசி கிலோ ரூ.15''மித்து... இப்ப தராசும் கையுமா ரேஷன் அரிசியை வாங்க வீடு, வீடா வர்றாங்களாம். இதுக்குனே, 50க்கும் மேற்பட்ட ஆளுங்க டூவீலர்ல சுத்தறாங்களாம்.''கேட்டா, 'பள்ளிச்செங்கம்' பகுதில, கிலோ 15 ரூபா வரைக்கும் வாங்கிக்கிறாங்களாம்னு சொல்றாங்க''மித்ரா வாயைப் பிளந்தாள்.'மித்து... கிராமம் மற்றும் நத்தம் நிலத்துக்கு, ஆவணப்பதிவு செய்யவே பதிவுத்துறையில தனியே எதிர்பார்க்கிறாங்க... காலியிடமா இருந்தா கூட, கேள்வி மேல் கேள்வி கேட்டு, இழுத்தடிச்சு, 10 ஆயிரம் ரூபா கூடுதலா செலவு பண்ணினாத்தான் பதிவே செய்றாங்களாம்.... கவர்மென்ட் உத்தரவு போட்டாலும், கொள்ளையடிக்கிறது குறையறதில்ல''''சித்ராக்கா... மக்களுடன் முதல்வர் திட்ட முகாமுக்கான செலவை வருவாய்த்துறை தான் செய்யணும். ஆனா, ஊராட்சி பகுதிகள்ல இதை நடத்துறப்ப, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளோட கைதான் பழுத்துருதாம். இந்தப் பணத்தை யார்ட்ட, எப்படி வசூலிக்கறதுன்னு தெரியலையாம்...''இந்த முகாம்ல வருவாய் துறை தொடர்பான சர்டிபிகேட்களுக்கு விண்ணப்பிச்சா, ஆன்லைன் வாயிலா விண்ணப்பிச்சு, ஆபீசுக்கு நேர்ல போயி வாங்கிக்குங்கன்னு சொல்றாங்களாம்... அப்புறம் எதுக்கு முகாம்னு பொதுமக்கள் கேட்கறது நியாயம்தானே...''அவிநாசி சூளைல நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புல குடியிருப்போர் நலச்சங்கத் தேர்தல்ல பழைய நிர்வாகிங்க ஒருத்தர் கூட ஜெயிக்கலையாம்.''வசூல்ல முறைகேடு நடந்ததா புதிய நிர்வாகிங்க சொல்றாங்களாம்... இது பெரிசா வெடிக்கும்போல தெரியுது''இரவு நேர 'லஞ்சப்பேய்'''மித்து... பல்லடம் யூனியன் ஆபீஸ்ல இருக்கிற 'மனோகரமான' அதிகாரி, டி.டி.சி.பி., அப்ரூவல் வேலையைத் தவிர்த்து வேறு எதையும் பார்க்கிறதில்லையாம். கமிஷன், கட்டிங்னு கட்டுக்கட்டான பணத்தோடதான் போறாராம்.''அப்புறம், ராத்திரி பத்து மணியானாலும் 'புதுார்கரை'யோட வி.ஏ.ஓ., ஆபீசை விட்டு கெளம்பறதில்லையாம். பட்டா மாறுதலுக்கு பத்து 'கே' வரைக்கும் வாங்குறாராம்... ராத்திரிதான் 'பார்ட்டி'ங்களை 'மீட்' பண்றாராம்''''சித்ராக்கா... தெற்கு மாவட்ட தி.மு.க., ஆபீஸ்ல, இளைஞர் அணி சார்பில பேச்சுப்போட்டி நடந்துச்சு... கட்சிக்காரங்க சத்தம்போட்டு பேசிட்டிருந்தாங்களாம். 'போட்டியாளர்கள் கவனம் சிதறும். அமைதியாக இருங்க'ன்னு மினிஸ்டர் சாமிநாதன் அட்வைஸ் பண்ணியிருக்காரு...''அரங்குக்கு வெளியே போட்டியாளர்களுக்கு வழங்க சூடா போண்டா, டீ வச்சிருந்தாங்களாம். மினிஸ்டர், மேயருன்னு எல்லாரும் ருசிச்சுச் சாப்பிட்டாங்களாம்''''மித்து... நீ சொல்றதெல்லாம் சரி... இங்க ஒன்னும் சூடா காணோமே''''அக்கா... பத்தே நிமிஷம் பொறுத்துக்கோங்க... மெதுவடையும், மசாலா டீயும் வந்திடும்''சமையலறைக்குள் நுழைந்தாள் மித்ரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை