மேலும் செய்திகள்
லஞ்சம் வந்த வழி... ஆளுங்கட்சி விஐபி 'கிலி'
10-Nov-2025
வீ ட்டின் 'காலிங்பெல்' ஒலிக்க கதவை திறந்தாள் சித்ரா. ''அடடே... வா மித்து. இப்பதான் நினைச்சேன். கண்ணு முன்னால நிக்கற; நுாறு வயசு உனக்கு...'' என்றவாறே மித்ராவை வரவேற்று, சூடாக காபி எடுத்து வந்தாள் சித்ரா. ''எல்லாரும் நுாறு வயசு வாழணும்ன்னு தான் ஆசை மித்து. ஆனா, ஊரெல்லாம் குப்பை கூளமா மாறிக்கிடக்கு. எங்க பார்த்தாலும் துர்நாற்றம் வீசுது. எப்படி ஆரோக்கியமா இருக்க முடியும்?'' அங்கலாய்த்தாள் சித்ரா. ''ஆமாங்க்கா... கார்ப்ரேஷன்காரங்க குப்பை கொட்ட இடமில்லாம தவிக்கிறாங்க. இடுவாய்ல குப்பை கொட்றதுக்கான ஏற்பாடுகளை பண்ணிட்டு இருக்காங்க. ஆனா, அங்க மக்கள், 'என்ன ஆனாலும், சரி... குப்பை கொட்ட விடவே மாட்டோம்'னு சொல்லி, பல போராட்டம் நடத்திட்டு இருக்காங்க. இதுக்கெல்லாம் ஒரு படி மேல போய், மண்ணை வாரி துாத்தி சாபம் கொடுக்கற போராட்டம் நடத்தவும் 'பிளான்' பண்ணிட்டு இருக்காங்களாம். அதனால, ஊர் சாபத்தை வாங்காம, வேறு ஏதாவது ஐடியா இருக்குதான்னு, கார்ப்ரேஷன் விஐபி தீவிரமா யோசிக்கிறாராம்,'' என்றாள் மித்ரா. ''இதே விஷயம் பத்தி, இன்னொரு மேட்டர் நான் சொல்றேன். போன வாரம், இடுவாய்ல பெரியளவுல போராட்டம் நடத்தினாங்களல்ல; அப்போ பாதுகாப்பு பணியில இருந்த ஒரு போலீஸ்காரர், 'உங்களுக்காக தான் காலையில இருந்து சாயங்காலம் வரை, வெயில்ல நின்னு கஷ்டபடறோம். நாங்களும் மனுசங்க தானே... போராட்டத்தை முடிச்சுக்கோங்கன்னு,' சொல்ல, கூட்டத்தில் இருந்த ஒரு லேடி, 'நீங்க சம்பளம் வாங்கிட்டு தானே வேல செய்றீங்க. மக்களுக்கு பாதுகாப்பு குடுக்கறது உங்க வேல தானே. ஆனா, எங்க வாழ்வாதாரம் பாதிக்கும்ன்னு போராட்டம் பண்ணிக்கிட்டு இருக்கோம்,'னு சொல்ல போலீஸ்காரர், 'சைலன்ட் மோடு'க்கு போயிட்டாராம்,'' என்றாள் சித்ரா. 'டிரான்ஸ்பர்' ரெடி ''போலீஸ்ன்னு சொல்லவும் தான், எனக்கொரு மேட்டர் ஞாபகம் வருதுங்க்கா. நம்ம டிஸ்க்ரிட்ல ஏகப்பட்ட போலீஸ்காரங்க பல வருஷமா ஒரே ஸ்டேஷன்ல இருக்காங்க. 'டிரான்ஸ்பர்' வந்தாலும், வேல செய்ற சப்-டிவிஷன் குள்ளயே டிரான்ஸ்பர் வாங்கி, நங்கூரம் போட்ட மாதிரி ஒரே இடத்துல சுத்திசுத்தி வர்றாங்களாம். அவங்கள்ல பல பேரு கட்டப்பஞ்சாயத்து, வசூல்ன்னு இறங்கிடறதால தான், நிறைய இடங்கள்ல ரவுடியிசம் இருக்குன்னு, பெரிய ஆபீசர் கவனத்துக்கு தெரிய வந்திருக்கு,'' ''இதனால, ஒரே போலீஸ் ஸ்டேஷன் மட்டுமில்லாம, ஒரே சப் - டிவிஷன்குள்ள ரொம்ப வருஷமா வேலை செய்ற போலீஸ்காரங்களோட 'லிஸ்ட்' எடுக்க சொல்லிட்டாரு. அநேகமா வேறவேற சப் - டிவிஷனுக்கு பழைய ஆட்களை துாக்கி அடிப்பாங்க போல,'' என்றாள் மித்ரா. ''நானும் போலீஸ் மேட்டர் சொல்றேன்டி,'' என்ற சித்ரா, ''தெக்கால 'டிராபிக்' கவனிக்கிற பெரிய ஆபீசர், 'பீல்டு'க்கே வர்றதே இல்லையாம். 'பைன்' போடற மிஷினை கூட, போலீஸ்காரங்ககிட்ட கொடுத்து அனுப்பிடறாராம். பெரிய ஆபீசர் கவனிச்சா பரவால்ல,'' என்றாள். கண்காணிப்பில் 'ஓட்டை' ''மங்கலம் ரோட்டுல, ஆண்டிபாளையம் குளம் பக்கத்துல, பேக்கரியை ஒட்டின மாதிரி சின்ன பெட்டிக்கடை இருக்காம். அதுல, புகையிலை, பான்பராக் ஜோரா விக்கறாங்களாம். அதுவும், டைரக்டா கடைல விக்கிறது இல்லையாம். 'குட்கா' கேட்கிறவங்களுக்கு ஒரு 'டோக்கன்' தர்றாங்களாம். அதை அங்க இருக்கற பேக்கரி பின்னாடி, மறைவா நின்னு வித்துகிட்டு இருக்கிறவர்க்கிட்ட போய் கொடுத்து பொருட்களை வாங்கிக்கணுமாம். நார்த் ஸ்டேட் லேபர்ஸ் நிறைய பேரு அங்க வந்து போறாங்களாம். இதுல என்ன ஒரு கூத்துன்னா, அந்த இடத்துக்கு கொஞ்சம் தள்ளித்தான், போலீஸ் 'அவுட் செக் போஸ்ட்' இருக்காம்...'' என்று கூறி சிரித்தாள் சித்ரா. ''போலீஸ் ஸ்டேஷன்லயே பூட்டு தொங்கறப்போ...செக் போஸ்ட்ல பூட்டு தொங்கறது பெரிய விஷயமா என்ன?'' என்ற மித்ரா சிரித்தபடியே தொடர்ந்தாள். ''சாட்டர்டே, சண்டே வீக் எண்ட் ஹாலிடேஸ்சில், ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கற, ஆர்.பி.எப். ஆபீஸ்ல பெரிய பூட்டு தொங்குதாம். எல்லாரும் ஸ்டேஷன் பாதுகாப்புக்கு போயிடறாங்கன்னு சொல்றாங்களாம். ஆபீசர், போலீஸ்காரங்கன்னு, 16 பேர் இருக்கிறப்போ, ஒருத்தரை கூடவா ஸ்டேஷன்ல உட்கார வைக்ககூடாதுன்னு, ரயில்வே பேசஞ்ஜர்ஸ் பேசிக்கிறாங்க,'' என்றாள். இதென்ன கூத்து ''நெருப்பெரிச்சல்ல அரசு நிலத்தை ஆக்கிரமிச்சு, கல்யாண மண்டபம் கட்டியிருக்காங்கன்னு, சமூக ஆர்வலர் ஒருத்தரு முதல்வரின் முகவரிக்கு பெட்டிஷன் அனுப்பியிருந்தாருன்னு ஏற்கனவே நாம பேசியிருந்தோம்ல'' என பேச்சை மாற்றிய சித்ரா, ''அந்த மனுவை விசாரிச்ச, நார்த் ரெவின்யூ ஆபீசர், விளக்கம் கேட்டு, மண்டப உரிமையாளர்களுக்கு 'நோட் டீசும்' அனுப்பியிருக்காரு,'' ''அவருக்கு நார்த் ரெவின்யூ ஆபீசர் அனுப்பிய ரிப்ளை லெட்டரில், சமூக ஆர்வலரு, பட்டா கேட்டு விண்ணப்பிச்ச மாதிரியும், கார்ப்ரேஷன் லிமிட்ல இடமில்லாததால, வேற இடத்துல இடம் தர்றோம்ங்கற மாதிரியும், சம்மந்தமே இல்லாத ஒரு பதிலை, அனுப்பியிருக்காராம். இதை சுட்டிக்காட்டி, அவரு, திரும்பவும் 'பெட்டிஷன்' அனுப்ப, சவுத் வருவாய் ஆபீசர்க்கிட்ட இருந்து ஒரு 'லெட்டர்' வந்ததாம். அதுலயும், அதேமாதிரி பதில் வரவே, சமூக ஆர்வலரு தலைசுத்தி போய் இருக்காராம்,'' என்றாள் மித்ரா. ''எல்லாம் அந்த பெருமாளுக்கே வெளிச்சம்...'' என 'உச்' கொட்டிய சித்ரா, ''திருப்பூர் பெருமாள் கோவில்ல, கேரள மாடல்ல கூரை வச்சு, கோசாலை அமைச்சாங்க. ஆனா, வேலை நடக்கறப்போவே, 'வெயிட்' தாங்காம, ஓடுகள் விழற மாதிரி ஆகிடுச்சாம். அதுக்கப்புறம், திரும்பவும் மறு மதிப்பீடு செஞ்சு, வேற மாதிரி 'பிளான்' பண்ணியிருக்காங்க. ஹிந்து அறநிலையத்துறைல இன்ஜினியரிங் பிரிவு இருந்தும், இந்த மாதிரி குளறுபடி வருதுன்னா என்ன பண்றது. மக்களோட காணிக்கை பணத்தை இப்படி வீணடிக்கலாமா...?'' என, ஆதங்கப்பட்டாள். கமிஷனில் கறார்... ''பஞ்சாயத்து யூனியன், வில்லேஜ் பஞ்சாயத்துல காலியா இருக்கற செயலர், உதவியாளர் போஸ்டிங் போடறாங்க. அதுக்கு கடும் போட்டியாம். இன்டர்வியூ முடிஞ்சும் கூட, 'அப்பாயின்மென்ட் ஆர்டர்' கொடுக்கறதுல 'லேட்' பண்றாங்க. ஆளுங்கட்சிக்காரங்க, லட்சங்கள்ல பேரம் பேசிட்டு இருக்கிறதால தான், 'லேட்' ஆகுதுன்னு சொல்றாங்க...''என கரப்ஷன் மேட்டரை சொன்னாள் மித்ரா. ''மித்து, லிங்கேஸ்வரர் ஊர்ல, 6 கோடி ரூபாய்ல காம்ப்ளக்ஸ் கட்டி, போன வருஷம், வீடியோ கான்பிரன்ஸில், துணை முதல்வர் திறந்து வச்சாருல்ல. ஆனா, இதுவரை திறக்கப்படவே இல்ல. அங்க இருக்கற கடை களுக்கு, இன்னும், இ.பி. - வட்டார் கனெக்ஷன் எதுவும் செஞ்சு முடிக்கலையாம். டாய்லெட் கட்டுமானப்பணி கூட முழுசா முடியலை. இருந்தாலும், வர்ற வெள்ளிக்கிழமை ஏலம் விடறதுக்கான வேலைகளை, முனிசிபாலிட்டி செஞ்சுட்டு இருக்கு. கமிஷன் பங்கீட்டுக்காக தான் இத்தனை அவசரம்ன்னு மக்கள் பேசிக்கிறாங்களாம்...'' என்றாள் மித்ரா. ''நீங்க சொல்றது சரிதாங்க்கா. ஆனா, அந்த 'பில்டிங்' கட்டி முடிச்சு, ரொம்ப வருஷமாச்சே. அப்படியே விட்டாலும், அப்புறம் எலக்ஷன் வந்துடுச்சுன்னா. இந்த வேலையும் நின்னுடுமே; மக்கள் வரிப்பணத்துல கட்டின கட்டடம் தான் வீணா போகும். கமிஷன் இல்லாம இப்ப எந்த வேலையும் நடக்குறது இல்ல; ஆனா, மனசாட்சிப்படி நடந்துக் கிட்டாங்கன்னா பரவாயில்ல...'' என, யதார்த்தம் சொன்னாள் சித்ரா. ''சரிங்க்கா கிளம்பறேன்,' என்ற மித்ராவை, வழியனுப்பினாள் சித்ரா.
10-Nov-2025