கரைபுரளுது லஞ்ச ஆறு கடிவாளம் போடுறது யாரு?
தீ பாவளி களைகட்டியிருந்தது. சரவெடி வைக்க, சித்ரா தயாரானபோது, மித்ரா ஸ்கூட்டரில் வந்தாள். ''அக்கா... வச்சிரப்போறீங்க... ஸ்கூட்டரை நிறுத்திக்கறேன்'' ''மித்து... பட்டாசுக்கடைக்கு லைசன்ஸ் கொடுக்கற ஆபீசரோன்னு பயந்துட்டேன்'' ''ஆமாக்கா... ஆமா... ஒவ்வொரு பட்டாசுக்கடைக்கும் போலீசுக்கு '5கே'; பயருக்கும், ரெவின்யூவுக்கும் '1கே'வாம்'' ''அதுபோக, ஓசிப் பட்டாசு கொடுக்கணும்ங்கறத மறந்துட்டியா?'' சிரித்துக்கொண்டே கேட்டாள் சித்ரா. 'கல்லா' கட்டியாச்சு ''அக்கா... மாவட்டத்துல வசூல் வேட்டை 'துாள்' கெளப்புச்சாம். ''வழங்கல் துறைல ரேஷன் கடை வாரியா, ஒவ்வொரு தாலுகா ஆபீசரும் தலா ஒரு 'எல்' மேலிடத்துக்கு வழங்கணும்ன்னு உத்தரவு. ''நம்பர் டூ ஆபீசருக்கு பிப்டி பெர்சன்ட்; மீதமுள்ள ஆபீசர்களுக்கு 'பிப்டி'யாம். குமரன் ரோட்ல உள்ள ஒரு ஓட்டல்ல வச்சு பட்டுவாடா நடந்திருக்கு'' ''மித்து... கேஸ் ஏஜன்சி ஒவ்வொண்ணும் '5கே' தந்தாங்களாம். ஒரு ஏஜன்சி காரரு '2கே'தான் தர முடியும்னாராம். ''எப்படியும் ஆபீசுக்கு வந்துதானே ஆகணும். அப்ப பார்த்துக்கறோம்ன்னு வசூலுக்கு வந்த ஆபீசர் கோபிச்சிக்கிட்டாராம்'' ''அக்கா... 'புட் சேப்டி'காரங்க, பெரிய ஓட்டல்களுக்கு தலா '25கே'; சின்ன, நடுத்தர ஓட்டலுக்கு அதுக்கேத்த மாதிரியும் வசூல் பண்ணியிருக்காங்க... வெள்ளியங்காட்டுல ஒரு பார்ல வச்சு செட்டில்மென்ட் நடந்திருக்கு'' ''மித்து... லஞ்சம் வாங்குற மக்கள் 'சேவகர்'களுக்கு கடிவாளம் போடாததால ஆணிவேரே அழுகிப்போச்சு'' சித்ராவின் வார்த்தைகளில் சமூக அக்கறை தெரிந்தது. எப்படி இந்த தைரியம்? ''அக்கா... எலக்ஷன் அறிவிக்க கொஞ்ச காலம்தான். கட்டாயம் டிரான்ஸ்பர் உறுதி. 'அடிக்கிற வரைக்கும் அடிக்கலாம்'ங்கறதுதான் கான்செப்ட். இதனாலதான் இந்த தைரியம்'' ''மித்து... பார்ல மாதாந்திர மாமூல் வசூலிக்க ஆளும் கட்சிப் பிரதிநிதிகளை நியமிச்சுட்டாங்க... ''அடுத்த கட்டமா, டாஸ்மாக் கடைல பாட்டிலுக்கு கூடுதலா நிர்ணயிக்கிற 10 ரூபாய் பணத்தை வசூல் பண்றதுக்குப் பிரதிநிதிகள் நியமிக்கப்போறாங்களாம். ''இதுல வார்டுக்கு ரெண்டு பேர் வீதம் பெயரைப் பரிந்துரைக்க, மாஜி மினிஸ்டர் தரப்பில் அட்வைஸ் பண்ணியிருக்காங்களாம்'' ''அக்கா... வெளங்குன மாதிரிதான்'' ''மித்து... மாவட்ட பெரிய அதிகாரிட்ட ஆளும்கட்சி வி.ஐ.பி.க்கள்'டிஸ்டன்ஸ்' காட்டறாங்களாம். நம்பர் டூ ஆபீசர்தான் ரொம்ப பவர் புல்லா இருக்காராம். ஆளும்கட்சி வி.ஐ.பி.க்களோட பி.ஏ.க்கள் இவருகிட்டத்தான் மணிக்கணக்குல பேசுறாங்களாம். எல்லாத்தையும் அந்த 'கார்த்திகேயன்'தான் பார்த்துக்கணும்'' சித்ராவின் குரல் கனத்தது. அதிகாரி 'விருட்' ''அக்கா... இளம் நுகர்வோருக்கான விழிப்புணர்வுப் புத்தாக்கப்பயிற்சிகலெக்டர் ஆபீஸ்லநடந்துச்சாம். மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ரத்தினசாமி நுகர்வோர் உரிமைகள் குறித்து பேசிட்டிருந்தப்ப, குறுக்கிட்ட மாவட்ட நம்பர் டூ அதிகாரி, 'இது, ஒன்வே கான்வர்சேஷன் போல இருக்கு... ஸ்டூடன்ட்ஸ்ச சந்தேகம் கேட்கச் சொல்லலாம்'ன்னாராம். ''ரத்தினசாமி, 'நான் முழுமையா பேசின பிறகு சந்தேகம் கேட்கச்சொல்லலாம்'ன்னு சொல்லிட்டு தொடர்ந்து பேசினாராம். சில நிமிஷத்துல நம்பர் டூ அதிகாரி அங்கிருந்து 'விருட்'டுன்னு கெளம்பீட்டாராம். ''ஆபீசர்ஸ் 'பிசி'யா இருக்கறது இயற்கைதானே'' மித்ரா நகைத்தாள். 'அன்பான' மிரட்டல் ''மித்து... மாநில வணிக வரித்துறை இப்ப ஜி.எஸ்.டி., மாநில வரியா மாறிடுச்சு. ''வாகனங்களை சோதனை செஞ்சு விதிமீறல் இருந்தா நடவடிக்கை எடுக்கிறாங்க... ''வரிவிதிப்பு மற்றும் மேல்நடவடிக்கைகள்ல புது ரூல்ஸ் எல்லாம் வந்தாலும் 'அப்டேட்' ஆகாதவங்க மாதிரி வர்த்தகர்கள்ட்ட சோதனை பண்றாங்களாம். ''புள்ளி, கமா பிரச்னைக்கெல்லாம் 'கப்பம்' கட்டச் சொல்றாங்களாம். கன்டெய்னர் லாரியை மடக்கி, '20கே' வரைக்கும் கேக்குறாங்களாம். ''டிரைவர்கள் சமாளிச்சுக்கொடுக்கலேன்னா, ஒரு லட்சம் வரைக்கும் 'பைன்' தீட்டிருவோம்ன்னு 'அன்பா' மிரட்றாங்களாம். ''பலரும் சரியா வேலை பார்த்தும், சிலரோட அத்துமீறலால டிபார்ட்மென்ட்டுக்கே கெட்டபேரு. இந்தப் பிரச்னைக்குமுதல்ல முடிவு கட்டினா பரவாயில்லைன்னு, இண்டஸ்ட்ரிகாரங்க ஆதங்கப்படறாங்க'' மித்ரா தலையசைத்தாள். இதுதானா மரியாதை? ''சித்ராக்கா... மாநில முதல்வர் கோப்பைல பங்கேற்ற பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களை அடங்கிய திருப்பூர் மாவட்ட டீம், மாநிலத்துல 18வது இடம் பெற்றிருக்காங்க. அஞ்சு தங்கம்,ஆறு வெள்ளி, ஏழுவெண்கலம்ன்னு18 பதக்கங்களை வாங்கியிருக்காங்க... ''மாநில போட்டில தங்கம் வென்ற அரசு ஊழியர், பள்ளி, கல்லுாரியைச் சேர்ந்தவர்கள் யார்ன்னு கூட, மாவட்ட விளையாட்டுத்துறை சொல்றதில்ல... ''போட்டி முடிஞ்சு ஒரு வாரமாகியும், கலெக்டரை வெற்றிபெற்றவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யல... ''முதல்வர் கோப்பைல தங்கம் வென்ற 'தங்கங்களுக்கு' இவ்ளோ 'மரியாதை' கொடுக்கற விஷயம், விளையாட்டுத்துறைய கவனிக்கிறடெபுடி சி.எம். காதுக்கு இன்னும் போகல போல இருக்கு'' ''மித்து... ஒன்னோட நக்கலுக்கு அளவே இல்லாமே போயிருச்சு'' சித்ரா கிண்டலடித்தாள். இதுவா 'நல்ல' முயற்சி? ''மித்து... ஸ்டேட்ல, அதிக மாணவிகள் படிக்கிறது நம்ம ஊரு எல்.ஆர்.ஜி. காலேஜ்லதான். ''காலேஜ் முடிஞ்சதும் மாணவியர் பஸ் ஸ்டாண்ட் செல்ல, வளாகத்திலயே கவர்மென்ட் பஸ் வந்திட்டு இருந்துச்சு. ''இதை சில 'நல்ல' ஆபீசருங்க முயற்சி பண்ணி நிறுத்திட்டாங்க... இப்ப கல்லுாரி விடற நேரத்துல, மூனு பிரைவேட் பஸ், மூனு மினி பஸ் வரிசை கட்டி நிக்குது. ஸ்டாப்ல 10 நிமிஷம் நின்னு மாணவிகளை அழைச்சிட்டுப்போறாங்க... ''கவர்மென்ட் பஸ்னா இலவசம். மாணவிகளுக்கு 'விடியல்' பயணம் வேணாம்ன்னு முடிவு பண்ணிய ஆர்.டி.ஓ. ஆபீஸ்காரங்க, காலேஜ் விடற அரை மணி நேரம் முன்னாடி தனியார் பஸ்கள் மட்டும் வர்ற மாதிரி, ரூட் பேட்டன் போட்டுக்கொடுத்திருக்காங்க... இதுல நடக்குற சிண்டிகேட்ட மினிஸ்டர் சிவசங்கர்தான் பார்க்கணும்'' ஆமோதித்தாள் மித்ரா. 'ஒய்யார' இன்ஸ்பெக்டர் ''சித்ராக்கா... ராதா நகர்ல தீபாவளிச்சீட்டு மோசடி தொடர்பா ஏமாந்த மக்கள், குமரன் ரோட்ல உள்ள ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க திரண்டு வந்திருக்காங்க... ''இன்ஸ். இவங்ககிட்ட பிரச்னைய காதுகொடுத்து கேக்காம, ஜீப்ல ஒய்யாரமா உட்கார்ந்துட்டாராம். மக்கள் 'ஷாக்' ஆயிட்டாங்க...இப்படித்தான் இன்ஸ். எப்பவுமே நடந்துக்கிறாராம். ''படம் எடுக்கவந்த பத்திரிகைகாரங்க கேமராவையும் போலீஸ்காரங்க பறிக்க முயன்றிருக்காங்க....'' ''ஏன் மித்து...இந்த இன்ஸ். ஒன்னரை டன் வெயிட்ட ஓங்கி அடிக்கறவரா... கமிஷனர் 'டோஸ்' விட்டார்னா அடங்கத்தான் போறாரு... நம்ம ஜெகந்நாதன் அண்ணாச்சிய வேணா பெட்டிஷன் போடச்சொல்லட்டுமா?'' சித்ரா சீறினாள். சிக்கிய ஆபீசர் ''மித்து... காளை நகர மகளிர் ஸ்டேஷன்ல 'போக்சோ' வழக்கு போட வேண்டிய பெட்டிஷன் தொடர்பா மிட்நைட் வரைக்கும் ஸ்டேஷன் அதிகாரி விசாரிச்சாராம். ''காலைல வந்து கேஸ் பைல் பண்லாம்னு போயிட்டாராம். ஆனா, அதுக்குள்ள, 'டிவி'ல 'நியூஸ்' வந்திருச்சு. ''மேலிடத்துல கேள்விக்கணைகள். உடனே வந்து 'போக்சோ' கேஸ் ரிஜிஸ்டர் பண்ணீட்டாராம். ''இந்த விஷயம் வெளில வந்ததுக்கு பெண் போலீஸ்தான் காரணம்ன்னு நெனச்சு கடுமையா திட்டிட்டாராம். ''போக்சோ கேஸ்னா உடனே விசாரிச்சு கேஸ் பைல் பண்ணனும்ன்னு ஆபீசருக்குத் தெரியணும். தெரியலைன்னா சிக்கல்தான்'' சித்ரா சரியாகச் சொன்னாள். ''அக்கா... காளை சப்டிவிஷனுக்கு புதுசா வந்திருக்கிற போலீஸ் ஆபீசர் ரொம்ப ஸ்ட்ரிக்டாம். பார்கள்ல 'வசூல்' பண்றது 'கட்' ஆயிருச்சாம். இந்த வசூலை நம்பி டிரான்ஸ்பராகி வந்த போலீஸ்காரங்க புலம்பறாங்களாம். கெடுபிடில, பார்கள் சிலதும் மூடிட்டாங்களாம். ''இதுதொடர்பா மினிஸ்டரையும் சில 'காக்கி'கள் பார்த்திருக்காங்க... மினிஸ்டர் முடியாதுன்னுட்டாராம். ''இனி இங்க இருந்தா சரிப்படாதுன்னு வசூல் பண்ண வாகான இடமா பார்த்து டிரான்ஸ்பர் ஆக சில போலீஸ்காரங்க 'ட்ரை' பண்றாங்களாம்'' சித்ரா சிரித்தாள். எஸ்.பி., 'டோஸ்' ''மித்து... மாவட்டத்துல தனிப்பிரிவு போலீஸ்காரங்க, எஸ்.பி., கட்டுப்பாட்டுக்குக் கீழ் செயல்படறாங்க... ''ஸ்டேஷன் பகுதில நடக்கிற சட்டவிரோதச் செயல்கள்ல ஆரம்பிச்சு, போலீசோட கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வேட்டை இதையெல்லாம் அவங்கதான் எஸ்.பி.க்கு உடனுக்குடன் ரிப்போர்ட் பண்ணனும். ''ஆனா, லேட்டா சொல்றதோட சில சட்டவிரோதச் செயல்களைஎஸ்.பி., கவனத்துக்கே கொண்டு போகாம விட்டுடறாங்களாம். தனிப்பிரிவு போலீஸ் கூட்டத்தை கூட்டி, எஸ்.பி., செம டோஸ் விட்ருக்காரு'' ''எஸ்.பி அதிரடி காட்ட ஆரம்பிச்சுட்டார்னு சொல்லுங்க்கா... சரிக்கா நாம அதிரடியா சரவெடியை வைப்பமா'' சரவெடியைப் பற்ற வைத்தாள் சித்ரா. ''மாணவிகளுக்கு 'விடியல்' பயணம் வேணாம்ன்னு முடிவு பண்ணிய ஆர்.டி.ஓ. ஆபீஸ்காரங்க, காலேஜ் விடற அரை மணி நேரம் முன்னாடி தனியார் பஸ்கள் மட்டும் வர்ற மாதிரி, ரூட் பேட்டன் போட்டுக்கொடுத்திருக்காங்க... இதுல நடக்குற சிண்டிகேட்ட மினிஸ்டர் சிவசங்கர்தான் பார்க்கணும்'' ''முதல்வர் கோப்பைல தங்கம் வென்ற 'தங்கங்களுக்கு' இவ்ளோ 'மரியாதை' கொடுக்கற விஷயம், விளையாட்டுத்துறைய கவனிக்கிற டெபுடி சி.எம். காதுக்கு இன்னும் போகல போல இருக்கு'' ''மாணவிகளுக்கு 'விடியல்' பயணம் வேணாம்ன்னு முடிவு பண்ணிய ஆர்.டி.ஓ. ஆபீஸ்காரங்க, காலேஜ் விடற அரை மணி நேரம் முன்னாடி தனியார் பஸ்கள் மட்டும் வர்ற மாதிரி, ரூட் பேட்டன் போட்டுக் கொடுத்திருக்காங்க... இதுல நடக்குற சிண்டிகேட்ட மினிஸ்டர் சிவசங்கர்தான் பார்க்கணும்''