5 - ஸ்டார் பெற்ற டாடா ஆல்ட்ரோஸ்
'பாரத் என்கேப்' கிராஷ் டெஸ்ட்டில், 'டாடா ஆல்டரோஸ்' ஹேட்ச்பேக் கார், 5 - ஸ்டார்களை பெற்றுள்ளது. இது, 5 - ஸ்டார்களை பெறும், டாடாவின் ஒன்பதாவது கார் ஆகும். முன்னதாக, 'குளேபல் என்கேப்' கிராஷ் டெஸ்ட்டில், இந்த கார் 5 - ஸ்டார்களை பெற்று இருந்தது. பெரியவர் பாதுகாப்பில், 32க்கு 29.65 புள்ளிகளையும், குழந்தை பாதுகாப்பில், 49க்கு 44.90 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இது, ஆல்ட்ரோஸ் அணிவகுப்பில் உள்ள அனைத்து கார்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.