மேலும் செய்திகள்
டாடா -- ஹிட்டாச்சி 9 இயந்திரங்கள் அறிமுகம்
14-Dec-2024
'ஏஸ்' கட்டுமான இயந்திர நிறுவனம், அதன் புதிய 'ஏ.எக்ஸ்., - 124' என்ற பேக்ஹோ லோடரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இயந்திரம், டிராக்டர், லோடர் மற்றும் எக்ஸ்கவேட்டர் ஆகிய மூன்றின் வேலைகளை செய்யும் திறன் உடையது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில், இந்த இயந்திரத்தில், பி.எஸ்., - 5 (சி.இ.வி.,), டாடா இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 15 சதவீதம் எரிவாயு செலவு குறைவதாகவும், 15 சதவீதம் கூடுதல் பணி மேற்கொள்ள முடியும் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது. இதில், 2 - வீல் டிரைவ் அமைப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.டிசைன் பொறுத்த வரையில், வலுவான தோற்றம் மற்றும் பிரீமியம் கேபின் வழங்கப்பட்டுள்ளது. இதில், 150 லிட்டர் ப்யூயல் டேங்க் உள்ளது. ஒரு மணி நேர பணிக்கு 30 லிட்டர் டீசல் பயன்படும். முன்புற பேக்ஹோ மூலம் 3 டன் எடை வரை தூக்க முடியும்.பயன்பாடு : மணல், கற்கள் மற்றும் இதர பொருட்களை அள்ளுதல் மற்றும் அகற்றுதல், குழி தோண்டுதல், கட்டட இடர்பாடுகளை அகற்றுதல்
இன்ஜின் - பி.எஸ்., 5, டாடா இன்ஜின்பவர் 75 ஹெச்.பி.,டார்க் 300 என்.எம்.,எடை 7.5 டன்
ரூ. 23 - 31 லட்சம் (எதிர்பார்ப்பு)
14-Dec-2024