அப்பாச்சி ஆர்.டி.எக்ஸ்., டி.வி.எஸ்.,ன் முதல் அட்வெஞ்சர் டூரர் பைக்
'டி.வி.எஸ்.,' நிறுவனம், 'அப்பாச்சி ஆர்.டி.எக்ஸ்.,' என்ற முதல் அட்வெஞ்சர் டூரர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. பெரும்பாலும் டூரிங் செய்ய உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கில், சிறிதளவில் ஆப்ரோடிங் செய்ய முடியும். இது, பேஸ், டாப் மற்றும் பி.டி.ஒ., என மூன்று மாடலில் வந்துள்ளது. இந்த பைக்கில் 'ஆர்.டி., எக்ஸ்.டி., - 4' என்ற புதிய 299.1 சி.சி., லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது, 8.2 வினாடியில் 100 கி.மீ., வேகத்தை எட்டும் திறன் உடையது. இந்த இன்ஜினோடு, 'பை டைரக்ஷனல் குயிக் ஷிப்டர்' வசதியுடன் 6 - ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் 'ஸ்லிப்பர் கிளட்ச்' இணைக்கப்பட்டுள்ளன.