உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / அப்பாச்சி ஆர்.ஆர்., 310 டி.வி.எஸ்.,ன் ட்ராக் போக்கஸ் பைக்

அப்பாச்சி ஆர்.ஆர்., 310 டி.வி.எஸ்.,ன் ட்ராக் போக்கஸ் பைக்

'டி.வி.எஸ்.,' நிறுவனம், அதன் 'அப்பாச்சி ஆர்.ஆர்., 310' பைக்கை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. கூடுதல் அம்சங்களுடன் வருவதால், இதன் விலை 3,000 ரூபாய் அதிகரித்துள்ளது.இந்த பைக்கில், அதே, 312 சி.சி., சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜினுடன், 6 - ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் குயிக் ஷிப்டர் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.இதர அம்சங்கள் பொறுத்த வரை, 8 - ஸ்போக் அலாய் சக்கரங்கள், 'ஸ்வைப்' இண்டிகேட்டர்கள், இன்ஜின் பவரை கட்டுப்படுத்தி வீல் ஸ்பின்னை குறைக்கும் 'லான்ச் கன்ட்ரோல்' அமைப்பு, கார்னரிங் செய்யும் போது வீல் லாக் ஆகாமல் இருக்க 'கார்னரிங் ட்ராக் டிரேக் கன்ட்ரோல்' அமைப்பு ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது, 'சீபேங் ப்ளூ' என்ற புதிய நிறத்தில் இந்த பைக் வந்துள்ளது. இதற்கு கூடுதலாக, 10,000 ரூபாய் செலுத்த வேண்டும். 'கே.டி.எம்., ஆர்.சி., 390', 'யமஹா ஆர்3', 'கவாஸாகி நிஞ்ஜா 400' மற்றும் 'பி.எம்.டபிள்யூ., ஜி 310 ஆர்.ஆர்.,' ஆகிய பைக்குகளுக்கு இது போட்டியாக உள்ளது.

விபரக்குறிப்பு

இன்ஜின் - 312 சி.சி., சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டுபவர் - 33.52 ஹெச்.பி.,டார்க் - 27.3 என்.எம்.,டாப் ஸ்பீடு - 160 கி.மீ.,(0 - 100 கி.மீ.,) பிக்கப் - 7.2 வினாடிமைலேஜ் - 30 - 35 கி.மீ.,

விலை: ரூ.2.78 லட்சம் - 3 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ