உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / பாரத் பென்ஸ் பிபி1924 இன்டர்சிட்டி பஸ் 53 பேர் சொகுசா பயணிக்கலாம்

பாரத் பென்ஸ் பிபி1924 இன்டர்சிட்டி பஸ் 53 பேர் சொகுசா பயணிக்கலாம்

'பாரத் பென்ஸ்' நிறுவனம், 19.5 டன் மொத்த எடை உள்ள 'பிபி1924' என்ற இன்டர்சிட்டி பஸ் சேசிஸை அறிமுகம் செய்துள்ளது. இதில், டிரைவர் உட்பட 53 பேர் வரை பயணிக்கலாம். இது, செமி ஸ்லீப்பர், சீட்டர் உள்ளிட்ட வெவ்வேறு உடல் அமைப்புகளில் கிடைக்கிறது. இந்த பஸ்சில், 7.2 லிட்டர், 6 - சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜின் வருகிறது. இந்த இன்ஜின் 6 - ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில், 380 லிட்டர் டீசல் டேங்க் வந்துள்ளதால், முழு டேங்கில் 1,300 கி.மீ.,ருக்கும் அதிகமாக பயணம் செய்யலாம்.

சொகுசான பயணத்திற்கு ஏர் சஸ்பென்ஷன்கள், பஸ் கவிழாமல் இருக்க எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஏ.பி.எஸ்., மற்றும் இ.பி.டி., வசதி, இறக்கத்தில் பிரேக்கை பயன்படுத்தாமல், பஸ்சின் வேகத்தை குறைக்க ரிட்டார்டர் வசதி, பயணிகளின் பாதுகாப்புக்கு வலுவான ஸ்டீல் சேசிஸ், க்ரூஸ் கன்ட்ரோல், டி.எப்.டி., டிஸ்ப்ளே, பிரேக் ஹோல்டு வசதி, மிஷ்லின் டயர்கள் என பல அம்சங்கள் இதில் வருகின்றன. இந்த பஸ்சுக்கு, 6 ஆண்டுகள் அல்லது 6 லட்சம் கி.மீ., வரை உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இந்த பஸ்சை 1.20 லட்சம் கி.மீ., க்கு ஒரு முறை பராமரித்தால் போதும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை