மேலும் செய்திகள்
'தள்ளு மாடல்' மொபைல் கிளினிக் வாகனம்
20-Feb-2025
'டிவோல்ட் எலக்ட்ரிக்' நிறுவனம், 'இவியேட்டார்' என்ற அதன் முதல் இலகு ரக மின்சார சரக்கு வாகனத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தை, கடைசி மைல் வினியோகம், இ - வணிகம் உள்ளிட்ட பல வகை வணிக போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம்.மேலும், பிக்கப் டிரக், டெலிவரி வேன் உள்ளிட்ட வெவ்வேறு செயல்பாடுகளுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும்.345 வோல்ட் 'ஹை வோல்டேஜ்' கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த வாகனத்தில், 43 கி.வாட்.ஹார்., லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சார்ஜில், முழு எடையுடன் 171 கி.மீ., வரை பயணம் செய்ய முடியும். 3.5 டன் மொத்த எடை கொண்ட இந்த வாகனத்தில், 1.7 டன் எடை வரை சுமந்து செல்லலாம். அத்துடன் 107 ஹெச்.பி., மோட்டார் பவரும், 300 என்.எம்., டார்க்கும் வழங்குகிறது. 80 சதவீதம் சார்ஜ் செய்ய, டி.சி., பாஸ்ட் சார்ஜிங் வாயிலாக 1 மணி நேரமும், ஏ.சி., சார்ஜிங் வாயிலாக 6 மணி நேரமும் எடுத்துக் கொள்கிறது. 14 டிகிரி முதல் 19 டிகிரி வரை உள்ள மேடு மற்றும் மலை பகுதிகளில் முழு எடையுடன் பயணிக்கும் திறன் இந்த வாகனத்துக்கு உண்டு.அம்சங்கள் பொறுத்த வரை, அடாஸ் பாதுகாப்பு, ஏ.சி., கேபின், மென்பொருள் மேம்பாடு, ஸ்மார்ட் போன் இணைப்பு வசதி, வாகன டிராக்கிங் வசதி, எல்.இ.டி., லைட்டுகள், செயற்கை நுண்ணறிவு கொண்ட வாகன பராமரிப்பு மற்றும் குறைபாடு எச்சரிக்கை உள்ளிட்டவை இதில் உள்ளன. வாகன மற்றும் பேட்டரி உத்தரவாதம், 5 ஆண்டுகள் அல்லது 1.75 லட்சம் கி.மீ., வரை வழங்கப்படுகிறது.
பேட்டரி 43 கி.வாட்.ஹார்.,மோட்டார் பவர் 107 ஹெச்.பி.,டார்க் 300 என்.எம்.,எடை 1.7 டன் (சரக்கு எடை)ரேஞ்ச் 171 கி.மீ.,
20-Feb-2025