ஹோண்டா ஆக்டிவா 1 கோடி விற்பனைகள்
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர், தென் இந்தியாவில் ஒரு கோடி விற்பனைகளை கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது.இந்தியாவில், 2001ம் ஆண்டில் இந்த ஸ்கூட்டர் அறிமுகமானது. முதல் 16 ஆண்டுகளில், 50 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனை ஆன நிலையில், அடுத்த ஏழே ஆண்டுகளில் 50 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 110 சி.சி., மற்றும் 125 சி.சி., ஆகிய இரு வகை ஆக்டிவா ஸ்கூட்டர்களும் இதில் அடங்கும். தென் இந்தியாவில், 1,700 விற்பனை மற்றும் சேவை மையங்களை வைத்துள்ளது இந்நிறுவனம்.தமிழகத்தில், இதுவரை 50 லட்சத்திற்கு மேற்பட்ட 'ஹோண்டா' இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.