உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / ஹோண்டா அமேஸ் டிசம்பர் 4ல் அறிமுகம்

ஹோண்டா அமேஸ் டிசம்பர் 4ல் அறிமுகம்

'ஹோண்டா கார்ஸ்' நிறுவனம், அதன் மூன்றாம் தலைமுறை 'அமேஸ்' காம்பாக்ட் செடான் காரை டிசம்பர் 4ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இம்முறை புதிய டிசைனில் கூடுதல் அம்சங்களுடன் வர உள்ளது.கடந்த 2013ல், இதன் முதல் தலைமுறை கார் இந்தியாவில் அறிமுகமானது. இதுவரை 12 லட்சத்திற்கு அதிகமான அமேஸ் கார்கள் இங்கு விற்பனையாகி உள்ளன.காரின் முன்புற கிரில், உலக சந்தையில் இருக்கும் 'ஹோண்டா சிவிக்' காரில் இருப்பதை போன்று 'ஹனி கோம்' டிசைனில் காட்சி அளிக்கிறது. இதில், அதே 1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான் பயன்படுத்தப்படுகிறது. இது, 5 - ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் பாக்ஸ்களில் வர உள்ளது. அடுத்த ஆண்டில், சி.என்.ஜி., வகையில் இந்த கார் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.மாருதியின் நான்காம் தலைமுறை ஸ்விப்ட் டிசையர் காருடன் இந்த அமேஸ் கார் நேரடியாக மோத உள்ளது. டாடா டிகார், ஹூண்டாய் ஆரா கார்களும் இந்த போட்டியில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ