உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / ஹோண்டா சி.பி., 300 ஆர் விற்பனை நிறுத்தம்

ஹோண்டா சி.பி., 300 ஆர் விற்பனை நிறுத்தம்

'ஹோ ண்டா மேட்டார்சைக் கிள்ஸ்' நிறுவனம், அதன் 'சி.பி., 300 ஆர்' என்ற ஸ்ட்ரீட் பைட்டர் பைக்கின் விற்பனையை எந்த அறிவிப்புமின்றி நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. நடப் பாண்டில், இந்த பைக் விற்பனையில் இருந்த கடைசி மூன்று மாதங்களில், ஒரு பைக் மட்டுமே விற்பனையானதாக கூறப்படுகிறது. கடந்த 2019ல் அறிமுகமான இந்த பைக்கில், 286 சி.சி., சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டது. 'கே.டி.எம்., - டி.வி.எஸ்., - பி.எம்.டபுள்யூ.,' ஆகிய நிறுவனங்களின் கடும் பேட்டியால், இந்த பைக்கின் விற்பனை சரிந்தது. இதன் உற்பத்தி முழுமையாக உள்நாட்டு மயமாக்கப்படாததால், போட்டியாளர்களை விட விலை அதிகமாகவும், அம்சங்கள் குறைவாகவும் இருந்தது. இந்த பைக்கின் விலை 2.41 லட்சம் ரூபாயாக இருந்ததன் காரணமாக, விற்பனை குறைந்து, இறுதியில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ