ஹோண்டா இசட்.ஆர்., - வி 2.0 லிட்டர் இன்ஜின், 22.8 கி.மீ., மைலேஜ்
'ஹோண்டா' நிறுவனம், அதன் 'இசட்.ஆர்., - வி' என்ற ஹைபிரிட் எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, முதற்கட்டமாக 120 கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த காரில், 2 லிட்டர், 4 சிலிண்டர், ஸ்ட்ராங் ஹைபிரிட் இன்ஜின் வருகிறது. இந்த இன்ஜின், 'இ - சி.வி.டி.,' என்ற ஆட்டோ கியர்பாக்சில் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ஹைபிரிட் கார் என்பதால், நகரப்புற பயன்பாட்டில் பெரும்பாலான நேரம் மின்சார மோடில் இயங்கும் திறன் உடையது. இதனால், 22.8 கி.மீ., மைலேஜ் தருவதாக இந்நிறுவனம் கூறுகிறது.