ஹூண்டாய் எக்ஸ்டர் இ.எக்ஸ்., - சி.என்.ஜி., ஆரம்ப விலை 1.14 லட்சம் குறைவு
'ஹூண்டாய்' நிறுவனம், 'எக்ஸ்டர் இ.எக்ஸ்., சி.என்.ஜி.,' என்ற காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காரின் விலை, பெட்ரோல் எக்ஸ்டர் காருடன் ஒப்பிடுகையில், 1.50 லட்சம் ரூபாய் அதிகம்.இது, இரு சி.என்.ஜி., சிலிண்டர்கள் கொண்ட ஆரம்ப விலை கார் ஆகும். இந்த இ.எக்ஸ்., மாடல் கார் அறிமுகப்படுத்தப்பட்டதால், ஆரம்ப விலை எக்ஸ்டர் சி.என்.ஜி., காரின் விலை, 1.14 லட்சம் ரூபாய் குறைந்துள்ளது. இரு சிலிண்டர்கள் பயன்படுத்துவதால், அதிகமான பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது.வெளிப்புற மற்றும் உட்புற மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. 'ஹெச்' வடிவ எல்.இ.டி., டெயில் லைட்டுகள், 'கீலெஸ் என்ட்ரீ', 4.2 அங்குல டிரைவர் டிஸ்ப்ளே, முன்புற பவர் விண்டோஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதி, பின்புற பார்க்கிங் சென்சார், ஏ.பி.எஸ்., இ.பி.டி., 6 காற்று பைகள் ஆகியவை இதில் உள்ளன.இந்த காரில், 1.2 லிட்டர், 4 - சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. பெட்ரோலுடன் ஒப்பிடுகையில், சி.என்.ஜி., மோடில், 14 ஹெச்.பி., பவரும், 18.8 என்.எம்., டார்க்கும் குறைவாக உள்ளது. இந்த காருக்கு, 'டாடா பஞ்ச் சி.என்.ஜி.,' கார் போட்டியாக உள்ளது.
விலை: ரூ.7.50 லட்சம்
விபரக்குறிப்பு:
இன்ஜின் - 1.2 லிட்டர், 4 - சிலிண்டர், பெட்ரோல்பவர் - 69 ஹெச்.பி.,டார்க் - 95.2 என்.எம்.,மைலேஜ் - 27.1 கி.மீ.,