இரு புதிய மாடலில் ஐ20
'ஹூண்டாய்' நிறுவனம், அதன் 'ஐ20' கார் அணிவகுப்பில், 'மேக்னா சி.வி.டி.,' 'மேக்னா எக்சிக்யூட்டிவ்' ஆகிய இரு மாடல் கார்களை அறிமுகம் செய்துள்ளது. இதனால், ஆட்டோ கியர் பாக்ஸ் கார்களின் அடிப்படை விலை, 58,000 ரூபாய் குறைந்துள்ளது. மேக்னா சி.வி.டி.,
'மேக்னா எம்.டி.,' மேனுவல் கியர் பாக்ஸ் மாடலுடன் ஒப்பிடுகையில், மேக்னா சி.வி.டி., ஆட்டோ கியர் பாக்ஸ் மாடலுக்கு, 'சன் ரூப்' மட்டும் கூடுதல் அம்சமாக வழங்கப்படுகிறது. விலை - ரூ. 8.89 லட்சம்மேக்னா எக்சிக்யூட்டிவ்
'மேக்னா எம்.டி.,' மாடலுடன் ஒப்பிடுகையில், இந்த மாடலில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், வாடிக்கையாளர்கள் எளிதாக அணுகும்படி, இதன் விலை, 27,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விலை - ரூ. 7.51 லட்சம்