உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / கைனடிக் டி.எக்ஸ்., இ.வி., மறுபிறவி எடுத்த கைனடிக் ஹோண்டா

கைனடிக் டி.எக்ஸ்., இ.வி., மறுபிறவி எடுத்த கைனடிக் ஹோண்டா

'கை னடிக் கிரீன்' நிறுவனம், 'டி.எக்ஸ்.,' என்ற புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. 80, 90களில் பிரபலமாக இருந்த, 'கைனடிக் ஹோண்டா டி.எக்ஸ்.,' ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்டு, இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 'டி.எக்ஸ்., டி.எக்ஸ்., பிளஸ்' ஆகிய இரு மாடல்களில் இது வந்துள்ளது. இதில், 2.6 கி.வாட்.ஹார்., லித்தியம் எல்.எப்.பி., பேட்டரி உள்ளது. மாடலை பொறுத்து 102 முதல் 116 கி.மீ., வரை ரேஞ்ச் தருகிறது. சக்கரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹப் மோட்டார், 90 கி.மீ., வேகத்தை எட்டுகிறது. பேட்டரி முழு சார்ஜ் செய்ய, 4 மணி நேரம் எடுக்கும். சாவி இல்லாமல் 'பாஸ்வேர்டு' வாயிலாக ஸ்டார்ட் செய்யும் வசதி, க்ரூஸ் கண்ட்ரோல், பாட்டு கேட்க ஸ்பீக்கர், புளூடூத் வசதி, திருட்டு எச்சரிக்கை, யூ.எஸ்.வி., சார்ஜிங் போர்ட், காலடி வெளிவர பிரத்யேக பட்டன், ஜியோ பென்சிங் வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. 8.8 அங்குல எல்.சி.டி., டிஸ்ப்ளே, ஸ்விட்ச் கியர் பட்டன்கள் ஆகியவை பழைய ஸ்கூட்டரை பிரதிபலிக்கின்றன. எல்.இ.டி., லைட்டுகள், 12 அங்குல சக்கரங்கள், உலோகத்தால் ஆன வெளிப்புறம், 704 எம்.எம்., சீட் உயரம், 220 எம்.எம்., முன்புற டிஸ்க் பிரேக் ஆகியவை குறிப் பிடத்தக்க மாற்றங்கள். பேட்டரி - 2.6 கி.வாட்.ஹார்., பவர் - 6.4 ஹெச்.பி., பூட் ஸ்பேஸ் - 37 லிட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் - 165 எம்.எம்., டாப் ஸ்பீடு - 80 முதல் 90 கி.மீ., ரேஞ்ச் - 102 முதல் 116 கி.மீ., விலை ரூ.1.11 - ரூ. 1.17 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ