உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / கே.எல்.எக்ஸ்., - 230 கவாஸாகி டர்ட் பைக், ஹீரோவுடன் நேருக்கு நேர்

கே.எல்.எக்ஸ்., - 230 கவாஸாகி டர்ட் பைக், ஹீரோவுடன் நேருக்கு நேர்

'கவாஸாகி' நிறுவனம், 'கே.எல்.எக்ஸ்., - 230' என்ற அதன் முதல் டர்ட் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைக், முழு ஆப்ரோடிங் செய்ய பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.இதில், 233 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன், 6 - ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில், முழு அட்ஜெஸ்ட்டபில் சஸ்பென்ஷன்கள் இல்லை என்றாலும், ஆப்ரோடு சாகசங்கள் செய்ய ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 139 கிலோவாக உள்ளது.டூயல் சேனல் ஏ.பி.எஸ்., வசதியுடன் இரு டிஸ்க் பிரேக்குகள், 880 எம்.எம்., மிக உயரமான சீட்டுகள், எல்.சி.டி., டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு ஆகியவை இதில் உள்ளன.இந்த பைக், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குக்கு கடும் போட்டியை கொடுக்கும். இதை 5,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். வினியோகம், ஜனவரி முதல் ஆரம்பமாகிறது.

விபரக்குறிப்பு

இன்ஜின் 233 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டுபவர் 17.85 ஹெச்.பி.,டார்க் 18.3 என்.எம்.,

ரூ. 2.50 - 2.60 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !