உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / மஹிந்திரா தார் ஓ.ஜி., எஸ்.யூ.வி., பவர் ஸ்டீயரிங், சஸ்பென்ஷன், டிஸ்ப்ளே புதியது

மஹிந்திரா தார் ஓ.ஜி., எஸ்.யூ.வி., பவர் ஸ்டீயரிங், சஸ்பென்ஷன், டிஸ்ப்ளே புதியது

'மஹிந்திரா' நிறுவனம், 'தார்' எஸ்.யூ.வி.,யை மேம்படுத்தி, 'தார் ஓ.ஜி.,' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், நான்காம் தலைமுறை 'எம் - கிளைட்' கட்டுமான தளத்தில் வந்துள்ளது. 2.0 லிட்டர், 'எம்-ஸ்டாலியன்' டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர், 'எம்-ஹாக்' டீசல், 1.5 லிட்டர் டீசல் என மூன்று இன்ஜின்கள் நீடிக்கின்றன. ஆனால், டர்போ பெட்ரோல் இன்ஜினுக்கு, 10 ஹச்.பி., பவரும், 30 என்.எம்., டார்க்கும், 2.2 லிட்டர் டீசல் இன்ஜினுக்கு 20 ஹச்.பி., பவரும், 30 என்.எம்., டார்க்கும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்ஜின் வகையை பொறுத்து, 6 - ஸ்பீடு மேனுவல், ஆட்டோ டார்க் கன்வர்ட்டர் கியர் பாக்ஸ்கள் கிடைக்கின்றன. இந்த காரின் ஆன்ரோட் அனுபவத்தை மேம்படுத்த, பின்புற சஸ்பென்ஷன் புதுப்பித்து, 'டாவின்ஸி டேம்பர்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரியர் மற்றும் ஆல் வீல் டிரைவ் அமைப்புகளில் வரும் இந்த காரின், வெளிப்புற மற்றும் உட்புற தோற்றம் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 'தார் ஓ.ஜி.,' அடையாளம், பம்பர்கள், எல்.இ.டி., ஹெட்லைட் மற்றும் டி.ஆர்.எல்., 18, 19 அங்குல அலாய் சக்கரங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. எலட்ரானிக் டிப்ரண்சியல் லாக், மூன்று டெரைன் மோடுகள், பவர் ஸ்டீயரிங், மேம்படுத்தப்பட்ட கேபின் இன்சுலேஷன், புஷ் பட்டன் ஸ்டார்ட், லெதர் சீட்கள், பின் வரிசைக்கு ஹேண்ட் ரெஸ்ட், கப் ஹோல்டர், ரியர் ஏ.சி., வென்ட்டுகள், பவர் விண்டோஸ், ஒயர்லெஸ் சார்ஜிங் மற்றும் இணைப்பு வசதிகள், யூ.எஸ்.பி., சி, பி போர்ட், 10 அங்குல நடு டிஸ்ப்ளே, 6 காற்று பைகள், ஆல் வீல் டிஸ்க், ஹில் ஹோல்டு, டிராக்ஷன் கன்ட்ரோல், பார்க்கிங் சென்சார், பின்புற கேமரா ஆகிய அம்சங்கள் புதிதாக இடம்பெற்றுள்ளன. விலை - ரூ. 10.32 லட்சம் முதல் 18.99 லட்சம் இன்ஜின் - 2.0 லிட்டர், டர்போ பெட்ரோல் 2.2 லிட்டர், டீசல் பவர் - 162 ஹெச்.பி., 152 ஹெச்.பி., டார்க் - 330 என்.எம்., 330 என்.எம்., டேங்க் - 50 லிட்டர் 55 லிட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் - 232 எம்.எம்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி