உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / மான்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ ஒரு சார்ஜ், 160 கி.மீ., ரேஞ்ச்

மான்ட்ரா எலக்ட்ரிக் சூப்பர் ஆட்டோ ஒரு சார்ஜ், 160 கி.மீ., ரேஞ்ச்

'முருகப்பா' குழுமத்தின் 'மான்ட்ரா எல்க்ட்ரிக்' நிறுவனம், 'சூப்பர் ஆட்டோ' என்ற மின்சார பயணியர் ஆட்டோவை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இதில், டிரைவர் உட்பட நான்கு பேர் வரை பயணிக்கலாம். இந்த ஆட்டோ 300 கிலோ எடையை சுமக்கும் திறன் உடையது. இது, 7.66 மற்றும் 10.6 கி.வாட்.ஹார்., என இரு லித்தியம் அயான் பேட்டரிகளில் வருகிறது. ஒரு சார்ஜில் 160 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ள முடியும். டாப் ஸ்பீடு 55 கி.மீ.,ராக உள்ளது. முழு சார்ஜ் செய்ய நான்கு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

அதிக பிடிமானம் வழங்க ரேடியல் டயர்கள், வசதியான மற்றும் நிலையான பயணத்திற்கு மேம்படுத்தப்பட்ட சஸ்பென் ஷன்கள், எல்.இ.டி., லைட்டுகள், வாகன நிலவரத்தை தெரிந்து கொள்ள ஸ்மார்ட் போன் இணைப்பு வசதி உள்ளிட்டவை வழங்கப் படுகின்றன. இந்த ஆட்டோ, நான்கு நிறங்களில் கிடைக்கிறது.மேலும் விபரங்களுக்கு: 81228 46864


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி