நிசான் கிராவைட் எம்.பி.வி., நான்கு மீட்டரில், 7 - சீட்டர் கார்
'நிசான்' நிறுவனம், 'கிராவைட்' என்ற எம்.பி.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இது, 'ரெனோ ட்ரைபர்' காரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறும் 4 மீட்டர் நீளம் உள்ள இந்த காரில், 7 பேர் பயணிக்கலாம். இதில், 1 லிட்டர், 3 சிலிண்டர், என்.ஏ., பெட்ரோல் இன்ஜின் வந்துள்ளது. இந்த இன்ஜினுடன், 5 - ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி., ஆட்டோ கியர் பாக்ஸ் கிடைக்கிறது. மூன்றாவது வரிசை சீட்டை அகற்றி, ஐந்து சீட்டர் காராகவும் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.