பி.ஒய்.டி., ‘டென்ஸா டி9’ இ.வி., 9 நிமிடத்தில் முழு சார்ஜ், 730 கி.மீ., ரேஞ்ச்
‘பி.ஒய்.டி.,’ நிறுவனம், ‘டென்ஸா டி9’ என்ற 7 – சீட்டர் மின்சார சொகுசு எம்.பி.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி முறையில் விற்பனையாகும் இந்த கார், ‘எம்.ஜி., எம்9’, ‘டொயோட்டா வெல்பையர்’, ‘பென்ஸ் வி கிளாஸ்’ கார்களுக்கு போட்டியாக வந்துள்ளது. நீளம் 5.25 மீ உள்ள இந்த காரில், 115.07 கி.வாட்.ஹார்., எல்.எப்.பி., லித்தியம் அயான் 'பிளேட்' பேட்டரி கிடைக்கிறது. முழு சார்ஜில், 730 கி.மீ., ரேஞ்ச் தருவதாக இந்நிறுவனம் கூறுகிறது. பிரண்ட் வீல் டிரைவ் அமைப்பில் வரும் இந்த கார், 100 கி.மீ., வேகத்தை எட்ட வெறும் 8.5 வினாடி எடுக்கிறது. 1,500 கி.வாட்., பாஸ்ட் சார்ஜரின் வாயிலாக, வெறும் ஒன்பது நிமிடங்களில் பேட்டரியை முழு சார்ஜ் செய்யும் திறன் உடையது. முதல் மற்றும் இரண்டாம் வரிசை, வென்ட்டிலேட்டட், மசாஜ், சொகுசு லெதர் சீட்கள், 15.6 மற்றும் 10.25 அங்குல இரு டிஸ்பளேக்கள், 16 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பவர்டு ஸ்லைடிங் டோர்கள், முதல் மற்றும் இரண்டாம் வரிசைக்கு 50 வாட் வையர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் பேட், கார் இணைப்பு வசதிகள், 3 – ஜோன் ஏ.சி., பேனரோமிக் சன்ரூப், விசேஷமான டிஸ்கஸ் – சி சஸ்பென்ஷன்கள், 18 அங்குல அலாய் சக்கரங்கள், 9 காற்று பைகள், அடாஸ் பாதுகாப்பு என பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. விலை – ரூ. 90 லட்சம் பேட்டரி – 115.07 கி.வாட்.ஹார்.,மோட்டார் பவர் – 462 ஹெச்.பி.,டார்க் – 365 என்.எம்.,ரேஞ்ச் – 730 கி.மீ.,(0 – 100 கி.மீ.,) பிக்கப் – 8.5 வினாடிபூட் ஸ்பேஸ் – 689 லிட்டர்எடை – 2.9 டன்