உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / ரெனோ ட்ரைபர் எம்.பி.வி., (ஏ) மாற்றம்! டர்போ இன்ஜின் இல்லை

ரெனோ ட்ரைபர் எம்.பி.வி., (ஏ) மாற்றம்! டர்போ இன்ஜின் இல்லை

'ரெ னோ' நிறுவனம், அதன் 'ட்ரைபர்' எம்.பி.வி., காரை புதுப்பித்து அறிமுகம் செய்துள்ளது. இது, நாட்டிலேயே குறைந்த விலையில் வரும் 7 - சீட்டர் கார் ஆகும். இந்த கார், 5, மற்றும் 6 சீட்டர் அமைப்புகளிலும் கிடைக்கிறது. 'ரெனோ' அடையாளம், கரு நிற கிரில், பம்பர்கள், 15 அங்குல ஸ்டீல் சக்கரங்கள், எல்.இ.டி., லைட்டுகள் ஆகியவையில் மாற்றம் உள்ளன. உட்புறத்தில், புதிய டேஷ் போர்டு வடிவமைப்பு, 8 அங்குல டிஸ்ப்ளே, ஒயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஸ்மார்ட் போன் இணைப்பு வசதிகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எலக்ட்ரோனிக் வெளிப்புற கண்ணாடிகள், பட்டன் ஸ்டார்ட் ஆகியவை வழங்கப் பட்டுள்ளன. ஆறு காற்று பைகள் அடிப்படை அம்சமாக வழங்கப்படுகிறது. கூடுதலாக, க்ருஸ் கன்ட்ரோல் வசதி, முன்புற சென்சார்கள், ஹில் ஹோல்டு அசிஸ்ட் உட்பட 21 பாதுகாப்பு அம்சங்கள் வருகின்றன. இன்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் இதர உதிரிபாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. மேனுவல் மற்றும் 'ஏ.எம்.டி.,' ஆட்டோ கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இன்ஜின் - 1 லிட்டர், 3 சிலிண்டர், என்.ஏ., பெட்ரோல் பவர் - 71 ஹெச்.பி., டார்க் - 96 என்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ் - 182 எம்.எம்., பூட் ஸ்பேஸ் - 625 லிட்டர் (5 சீட்டர்) மைலேஜ் - 17 முதல் 20 கி.மீ., விலை : ரூ.6.30 - ரூ.9.17 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ