ரிவோல்ட் ஆர்.வி.எக்ஸ்., 160 கி.மீ., ரேஞ்ச் தரும் குறைந்த விலை பைக்
'ரிவோல்ட் மோட்டார்ஸ்' நிறுவனம், 'ஆர்.வி.எக்ஸ்.,' என்ற புதிய மின்சார பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இது, 'ஆர்.வி., பிளேஸ்' மற்றும் 'ஆர்.வி., 400' பைக் மாடல்களுக்கு இடையில் வந்துள்ளது. இந்த பைக்கில், 3.24 கி.வாட்.ஹார்., ரிமூவபிள் என்.எம்.சி., பேட்டரி வந்துள்ளது. முழு சார்ஜில் 160 கி.மீ., ரேஞ்ச் தருவதாக இந்நிறுவனம் கூறுகிறது. பூஸ்ட் மோடில், இதன் டாப் ஸ்பீடு 90 கி.மீ., ராக உள்ளது. இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்ய, 80 நிமிடம் எடுக்கிறது. பேட்டரிக்கு, 8 ஆண்டுகள் அல்லது 80,000 கி.மீ., வரை உத்தரவாதம் கிடைக்கிறது.