ஸ்கோடா கோடியாக் 2026
'ஸ்கோடா' நிறுவனம், அதன் 'கோடியாக்' எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. ஐந்து, ஏழு சீட்டர் வகையில் வரும் இந்த காரின் அடிப்படை மாடலுக்கு மூன்று லட்சம் ரூபாயும், நடு மாடலுக்கு ஒரு லட்சம் ரூபாயும், கடைசி மாடலுக்கு 50,000 ரூபாயும் விலை குறைக்கப்பட்டுள்ளது. 2.0 லிட்டர், டர்போ பெட்ரோல், டி.எஸ்.ஐ., இன்ஜின், 7 - டி.எஸ்.ஜி., ஆட்டோ கியர்பாக்ஸ், ஆல் வீல் டிரைவ் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை.