டாடா எல்.பி.டி., 812 லாரி நான்கு சக்கரத்தில் ஐந்து டன் பேலோட்
'டா டா மோட்டார்ஸ்' நிறுவனம், 'எல்.பி.டி., 812' என்ற நடுரக சரக்கு லாரியை அறிமுகம் செய்துள்ளது. இது, நான்கு சக்கரங்களில், 5 டன் எடையை சுமக்கும் திறன் கொண்ட நாட்டின் முதல் லாரியாகும். இந்த லாரி, இ - வணிகம், தொழில்துறை, உணவு சரக்கு வினியோகங்களுக்கு பயன்படுத்தப்படும். இதில், 3.3 லிட்டர், 4 - சிலிண்டர், டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. போக்குவரத்து நெரிசலில், வாகனத்தை எளிதாக இயக்க மென்மையான 5 - ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.