உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / டாடா பன்ச் 2026 டர்போ பெட்ரோல் இன்ஜின் அறிமுகம்

டாடா பன்ச் 2026 டர்போ பெட்ரோல் இன்ஜின் அறிமுகம்

'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் 'பன்ச்' சப் காம்பேக்ட் எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. 'நெக்ஸான்' காரில் வரும், 1.2 லிட்டர், 3 - சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின், முதல் முறையாக இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார், என்.ஏ., மற்றும் டர்போ பெட்ரோல், சி.என்.ஜி., இ.வி., என நான்கு மாடல்களில் வந்துள்ளது. சி.என்.ஜி., மாடலுக்கு முதல் முறையாக '6 - ஸ்பீட் ஏ.எம்.டி.,' ஆட்டோ கியர்பாக்ஸ் கிடைக்கிறது.

மேம்படுத்தப்பட்ட தோற்றம், கனெக்டட் எல்.இ.டி., டெயில் லைட், 16 அங்குல அலாய் சக்கரங்கள், 90 டிகிரி திறக்கும் கதவுகள், சாவி இல்லாமல் கதவு திறப்பு, 360 டிகிரி கேமரா ஆகியவை வெளிப்புற மாற்றங்கள் ஆகும். உட்புறத்தில், 10.25 மற்றும் 7 அங்குல டிஸ்ப்ளேகள், சன் ரூப், ஆட்டோ ஏ.சி., டச் கன்ட்ரோல், காற்று சுத்திகரிப்பு வசதி, கூடுதல் 'தை சப்போர்ட்' வசதியுடன் சீட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங், 4 - ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் சார்ஜிங், 65 வாட் 'சி - டைப்' பாஸ்ட் சார்ஜிங், 50க்கும் மேற்பட்ட இணைப்பு வசதிகள் உள்ளிட்ட பல அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. கிராஷ் டெஸ்ட்டில் 5 - ஸ்டார் பெற்றுள்ள இந்த காரில், ஆறு காற்று பைகள், டிஸ்க் மற்றும் டிரம் பிரேக்குகள், ஏ.பி.எஸ்., 'ஹில் ஹோல்டு கன்ட்ரோல்' உள்ளிட்டவை கிடைக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை