உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / இ.எஸ்., 2025 லெக்சஸின் முதல் செடான் மின்சார கார்

இ.எஸ்., 2025 லெக்சஸின் முதல் செடான் மின்சார கார்

'லெக்சஸ்' நிறுவனம், 'இ.எஸ்.,' என்ற சொகுசு செடான் காரை, எட்டாம் தலைமுறைக்கு மேம்படுத்தி, உலகளவில் காட்சிப்படுத்தி உள்ளது. ஏற்கனவே, ஹைபிரிட் மாடலில் உள்ள இந்த கார், முதல் முறையாக, மின்சார மாடலில் வந்துள்ளது. இது, இந்நிறுவனத்தின் முதல் செடான் மின்சார கார் ஆகும்.இதன் மின்சார மாடல் கார், இருவகையில் வந்துள்ளன. 224.3 ஹெச்.பி., மோட்டார் பவர், பிரண்ட் வீல் டிரைவ் அமைப்பில் வரும் '350இ' என்ற வகையிலும், 343.6 ஹெச்.பி., மோட்டார் பவர், ஆல் வீல் டிரைவ் அமைப்பில் வரும் '550இ' என்ற வகையிலும் உள்ளன. ஒரு சார்ஜில், '350இ' வகை 685 கி.மீ., ரேஞ்சும், '550இ' வகை 620 கி.மீ., ரேஞ்சும் வழங்குகின்றன. சார்ஜிங் நேரம், பேட்டரி ஆற்றல் குறித்து எந்த தகவலும் இல்லை.இதன் ஹைபிரிட் மாடல் கார், இரு வகையில் உள்ளன. அதாவது, '300ஹெச்.,' வகைக்கு, 2 லிட்டர் மற்றும் 2.5 லிட்டர், 4 - சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்களும், 'இ.எஸ்., 350ஹெச்' வகைக்கு, அதிக பவர் வழங்கும் வகையில் ட்யூன் செய்யப்பட்ட 2.5 லிட்டர், 4 - சிலிண்டர், பெட்ரோல் இன்ஜினும் வழங்கப்படுகின்றன. இருவகை கார்களும், 'இ-சி.வி.டி.,' என்ற ஆட்டோ கியர் பாக்ஸ், பிரண்ட் மற்றும் ஆல் வீல் டிரைவ் அமைப்புகளில் வருகின்றன.இந்த கார், காற்றை எளிதாகக் கிழிக்கும் வகையில் 'ஏரோடைனமிக்' டிசைனில், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய காருடன் ஒப்பிடுகையில், நீளம் 165 எம்.எம்., அகலம் 55 எம்.எம்., உயரம் 110 எம்.எம்., வீல் பேஸ் 80 எம்.எம்., அதிகரிக்கப்பட்டுள்ளது. தாய் நிறுவனமான டொயோட்டாவின் 'கேம்ரி' காரை போன்ற முன்புறத் தோற்றம், 'எல்' வடிவ டி.ஆர்.எல்., லைட்டுகள், மெல்லிசான கனெக்டட் டெயில் லைட்டுகள், புதிய பக்கவாட்டு டிசைன், 18 முதல் 21 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை காரை முழுமையாக புதுமைப்படுத்தி உள்ளது.உட்புறத்தில், 14 மற்றும் 12.3 அங்குல டிஸ்ப்ளேக்கள், பேனரோமிக் கிளாஸ்ரூப், பின்புற ரிக்லைன் சீட்டுகள், மேம்படுத்தப்பட்ட பயண அனுபவம், சத்தம் குறைவான கேபின், அடாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் உள்ளன. இந்த கார், நடப்பு நிதியாண்டிற்குள் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை