உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / பழசுக்கு இன்னும் இருக்கு மவுசு

பழசுக்கு இன்னும் இருக்கு மவுசு

இன்று பி.எம்.டபிள்யூ., ஹார்ட்லி டேவிட்சன், பென்ட்லி, டுகார்டி என, நவீன வாகனங்களில் இன்றைய இளைஞர்கள் வலம் வருகின்றனர்.அப்படி இருக்கையில், 1980களில் வந்த பஜாஜ் ஸ்கூட்டரில் வலம் வருகிறார் ஒரு இளைஞர். கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த குருதேவ் பட் தான் அவர். இந்த ஸ்கூட்டர் மீது அவருக்கு அலாதி பிரியம்.அவர் கூறுகையில், ''மிகவும் பிரத்யேகமான வாகனம் இது. பள்ளி படிக்கும் போது, அப்பா இந்த ஸ்கூட்டரில் தான் பள்ளிக்கு அழைத்துச் செல்வார். அப்போதிருந்தே இதன் மீது ஒரு ஈர்ப்பு. அதன் காரணமாகவே, பழைய இரும்புக்கடையில் இருந்து, இந்த வாகனத்தை எடுத்தேன். மற்ற வாகனங்களை பார்க்கும் போது, பராமரிப்பு கட்டணம் குறைவே,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ