டி.வி.எஸ்.,சின் புதிய 299 சி.சி., இன்ஜின்
'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனம், புதிய 299 சி.சி., இன்ஜினையும், மேம்படுத்தப்பட்ட 'ரோனின்' பைக்கையும் அறிமுகப்படுத்தி உள்ளது.இந்த 299 சி.சி., ஏர், ஆயில் மற்றும் லிக்விட் கூல்டு இன்ஜினுக்கு, 'ஆர்.டி., - எக்ஸ்.டி.4.,' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் பவர், 35 ஹெச்.பி., மற்றும் டார்க் 28.5 என்.எம்., ஆக உள்ளது. திறன் அடிப்படையில், அப்பாச்சி 310 பைக்கை போன்று இருப்பதாகவும், ஆனால் இந்த இன்ஜினின் உட்புற அளவுகோல்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது, வர இருக்கும் புதிய டி.வி.எஸ்., பைக்கில் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.ரோனின் பைக்கின் நடுரக 'டி.எஸ்.,' மாடலுக்கு, டூயல் சேனல் ஏ.பி.எஸ்., அடிப்படை அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இரு புதிய நிறங்களிலும், இந்த பைக் வந்துள்ளது.