உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி /  யுவோடெக் பிளஸ் 585 டி.ஐ., வி1 மஹிந்திராவின் ஹெவி டியூட்டி டிராக்டர்

 யுவோடெக் பிளஸ் 585 டி.ஐ., வி1 மஹிந்திராவின் ஹெவி டியூட்டி டிராக்டர்

'மஹிந்திரா' நிறுவனம், 'யுவோடெக் பிளஸ் 585 டி.ஐ., வி1' என்ற டிராக்டரை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இது, நிலத்தை தயார் படுத்துதல், உழுதல் உட்பட சரக்கு ஏற்றி இறக்கும் வேலைகளை செய்யும் திறன் உடையது. இந்த டிராக்டரில் ஏற்கனவே உள்ள, 3.5 லிட்டர், 4 - சிலிண்டர், 'எம் - புல்' டீசல் இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. கடினமான நிலப்பரப்புகளில், 30 சதவீதம் கூடுதல் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் உடையது. 2 வீல் மற்றும் 4 வீல் டிரைவ் அமைப்புகளில் வரும் இந்த டிராக்டரில், 12 பிரண்ட் மற்றும் 3 ரிவர்ஸ் கியர்கள் கொண்ட கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 2,000 கிலோ எடை உள்ள இணைப்புகளை இயக்கும் நவீன ஹைட்ராலிக்ஸ் அமைப்பு, ஓட்டுனர் சோர்வடையாமல் இருக்க குஷன் சீட்கள், பவர் ஸ்டீயரிங், விவசாய நிலங்களில் நிலையாக இருக்க 'ஸ்டபிலைசர் பார்' பயன்பாடு, ஒரே கிளட்ச் வாயிலாக டிராக்டர் மற்றும் இணைப்புகளை கட்டுப்படுத்தும் வசதி, இணைப்புகளை மூன்று வேகங்களில் இயக்கும் வசதி என பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், பராமரிப்பு 400 மணி நேரம் என்றும், ஆறு ஆண்டு வரை உத்தரவாதம் வழங்கப்படுவதாகவும் இந்நிறுவனம் கூறுகிறது. எதிர்பார்ப்பு விலை - ரூ. 8 - ரூ. 9 லட்சம் இன்ஜின் - 3.5 லிட்டர், டீசல் பவர் - 49 ஹெச்.பி., டார்க் - 215 என்.எம்., இணைப்பு எடை - 2,000 கிலோ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ