விடா வி2 மின்சார ஸ்கூட்டர் 1 லட்சம் ரூபாயில் லேட்டஸ்ட் என்ட்ரி
'ஹீரோ மோட்டோகார்ப்' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'விடா' நிறுவனம், 'வி2' என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்கூட்டர், 'லைட், பிளஸ் மற்றும் ப்ரோ' என மூன்று வகையில் வந்துள்ளது.வகையை பொறுத்து, 2.2 கி.வாட்.ஹார்., முதல் 3.94 கி.வாட்.ஹார்., வரை பேட்டரியின் திறன் மாறுபடுகிறது. இதன் ரேஞ்ச், 94 கி.மீ., முதல் 165 கி.மீ., வரை தருகிறது. இந்த பேட்டரியை ஸ்கூட்டரில் இருந்து எடுத்து, தனியாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.அம்சங்களை பொறுத்த வரை, இரு ரைட் மோடுகள், 7 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, 5 ஆண்டு அல்லது 50,000 கி.மீ., வரை வாகன உத்தரவாதம் என பல அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் வி2 லைட் என்ற விடா ஸ்கூட்டர் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு, 'டி.வி.எஸ்., 2.2.,' மற்றும் 'பஜாஜ் சேத்தக்' 2903 ஆகிய குறைந்த விலை ஸ்கூட்டர்கள் போட்டியாக உள்ளன.
விலை: ரூ.96,000 - 1.35 லட்சம்
விபரக்குறிப்பு
பேட்டரி 3.94 கி.வாட்.ஹார்.,மோட்டார் பவர் 8.04 ஹெச்.பி.,டார்க் 25 என்.எம்.,ரேஞ்ச் 165 கி.மீ.,டாப் ஸ்பீட் 90 கி.மீ.,(0 - 40 கி.மீ.,) பிக்கப் 2.9 வினாடி