மேலும் செய்திகள்
இன்றும் செல்லத்தக்கதாகும் பஞ்சாயத்து அனுமதி
08-Mar-2025
கோவை, சத்தி ரோடு, சரவணம்பட்டியில் ஜி.எஸ்.கே., நகரில் கிழக்கு பார்த்த, 20 ஆண்டுகள் பழமையான, 750 சதுரடியில் வீட்டுடன், 4.5 சென்ட் விலைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம்?-மூர்த்திபாலன், கோவை.இடமானது ரெசிடென்சி, பி.ஜி., 'கெஸ்ட் ஹவுஸ்' அமைக்க ஏற்றது. இந்த இடத்தை சுற்றிலும் பள்ளி, கல்லுாரிகள் அதிகம் இருப்பதால், ஆண்கள், பெண்கள் தங்கும் விடுதியாக மாற்றி கிடைக்கும் வருவாயை கணக்கிட்டால் இதன் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.கோவை மாவட்டம், அத்திப்பாளையம் பிரிவில் இருந்து தனியார் கல்லுாரி வழியே சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் முன்புறம், 40 அடி தார்சாலையுடன், 20 சென்ட் இடம் விற்பனைக்கு வருகிறது. என்ன விலை கொடுக்கலாம்.-சத்தியசீலன், கோவை.தாங்கள் கூறியுள்ள இடத்தில் தொழிற்சாலைகள் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், டி.டி.சி.பி., மாஸ்டர் பிளானின்படி குடியிருப்பு பகுதியாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இண்டஸ்ட்ரியல் காம்பவுண்ட் ஆக மாற்றி, அதன் மூலம் கிடைக்கும் வருவாயின் அடிப்படையில் பார்த்தால், அதன் மதிப்பு சென்ட் ரூ.10 லட்சம். அப்பார்ட்மென்ட் என அபிவிருத்தி செய்தால் தொழிற்சாலைகளுக்கு இடையே குடியிருப்புகள் செல்லுமா என பார்க்க வேண்டும். பிளாட்களாக விற்க துணிந்தால் ரூ.15 லட்சம் கொடுத்து வாங்கலாம்.கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி சந்திப்பில் இருந்து மலுமிச்சம்பட்டி செல்லும் வழியில் தனியார் கல்லுாரி ரோட்டில், 30 சென்ட் இடமும், 7,000 சதுரடியில் ஒர்க்ஷாப், 30 எச்.பி., திறன் கொண்ட மின் இணைப்பு, போர்வெல் வசதிகளுடன் விலைக்கு வருகிறது. என்ன விலை கொடுக்கலாம்.-பிரேம்குமார், கோவை.தாங்கள் கூறிய இடம் தனியார் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டாகவும், ஒரு பகுதி குடியிருப்பு பகுதியாகவும் உள்ளது. இந்த இடத்தில், 2 கி.மீ., தொலைவில் பிரதான எல் அண்ட் டி பைபாஸ் உள்ளது. எனவே ரூ. 1.75 கோடி கொடுத்து வாங்கலாம்.தகவல்: ஆர்.எம்.மயிலேரு,கன்சல்டிங் இன்ஜினியர்.
08-Mar-2025