உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / புதிய தொழில்நுட்பத்தில் மேல்-கீழ் கட்டுமானம்; குறுகிய கால பணிகளால் செலவினம் குறையும்

புதிய தொழில்நுட்பத்தில் மேல்-கீழ் கட்டுமானம்; குறுகிய கால பணிகளால் செலவினம் குறையும்

பாரம்பரிய கட்டுமான முறை என்பது நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளக் கூடியது. நாட்கள் அதிகரிக்கும்போது கட்டுமான பொருட்களின் விலை காரணமாக கட்டுமான செலவும் அதிகரிக்கிறது. இதை எதிர்கொள்ள மேலிருந்து கீழாக கட்டுமானம் என்ற புதிய முறையை எடுத்துச் செல்லலாம்.இந்த புதிய தொழில்நுட்பத்தில் ஒரே நேரத்தில் ஒரு கட்டடத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை கட்ட முடியும் என்கிறார், இந்திய தர கட்டுப்பாட்டு மைய முதன்மை உறுப்பினர்(சிமென்ட் மற்றும் கற்காறை பிரிவு) கார்த்திக்.அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...மேல், கீழ் கட்டுமான முறையில் நிலத்திற்கு கீழே தோண்டுவதற்கு முன், ஏதேனும் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க, கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இடத்தை சுற்றி தடுப்புச் சுவர் ஒன்றை முதலில் அமைக்கும்போது, அவை கட்டமைப்பு கூறாக செயல்படுகிறது.வட்ட துாண் முறை கொண்ட அடிமானம் அமைத்து கட்டடத்தின் எடையை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பிறகு முதல் அடித்தள நிலை அமைப்பதற்கான தோண்டுதல் பணிகளை தொடங்க வேண்டும். பிறகு முதல் அடித்தள தளத்திற்கான கூரையை உருவாக்க வேண்டும்.இயந்திரங்களை கீழ்நிலைகளுக்கு இறக்குவதற்கும், தோண்டும் கழிவுகளை அகற்றுவதற்கும் தேவையான துளைகள் இடம் பெற வேண்டும். இந்த நிலையில், மேல்தள கட்டுமான பணிகளும் மேற்கொள்ளலாம்.அடுத்த நிலைகள் தோண்டப்பட்டு, ஒவ்வொரு அடிநிலை தளமும் கட்டமைக்கப்படும். இரண்டாம் நிலை தோண்டுதல் பணிகளை மேற்கொண்டு, இரண்டாம் அடிநிலைத் தளத்திற்கான தரைத்தள கூரையை உருவாக்க வேண்டும்.இந்த செயல்முறை ஒவ்வொரு பின்னணி அடிநிலைத் தளத்திற்கும் மீண்டும் செய்யப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு கூரையும் தடுப்பு சுவருக்கு பக்க ஆதரவாக செயல்படும். தேவையான அடிநிலை ஆழம் கிடைக்கும் வரை தோண்டுதல் மற்றும் கூரை கட்டுமான செயல்முறையை தொடர்ந்து மேற்கொள்ளவும்.கீழே நாம் தேவையான நிலையை அடைந்த பின்பு தேவையான அளவிற்கு அஸ்திவாரத்தை உருவாக்கி அடிநிலை கட்டமைப்பு முழுமையாக செய்யப்பட வேண்டும். கீழே பணிகள் மேற்கொண்டு இருக்கும் பொழுதே மேல்தளத்திலும் கட்டடங்கள் கட்டலாம். திட்டம் விரைவாக முடிவடைவதால், மொத்த செலவினம் குறையலாம். மேல் கீழ் கட்டுமான முறையை வெற்றிகரமாக செயல்படுத்த, சரியான திட்டமிடல், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் திறமையான நிர்வாகம் தேவைப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை