உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை /  வீட்டுக்கு காப்பீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்!

 வீட்டுக்கு காப்பீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்!

சமீப காலமாக, வீடு போன்ற சொத்துக்களுக்கு எப்போது, என்ன வகையில் பிரச்னை வரும் என்று தெரியாத சூழல் நிலவுகிறது. தற்போதைய சூழலில், ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, வாகனங்களுக்கான காப்பீடு ஆகியவை மக்கள் மத்தியில் அவசிய தேவையாக மாறியுள்ளன. இந்நிலையில், வீடு போன்ற அசையாக சொத்துக்களுக்கும் பல்வேறு வகை பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், ஏற்படும் சேதங்களுக்கு நிவாரணம் பெறுவதற்கு காப்பீடு திட்டங்கள் அவசிய தேவையாக தற்போது மாறி உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வீடுகளுக்கு காப்பீடு தேவையா என்று மக்கள் இன்றும் யோசிக்கின்றனர். ஆனால், வீடுகளுக்கு காப்பீடு எந்த அளவுக்கு அவசியம் என்பதை மக்கள் சரியாக புரிந்து கொண்டால் தான், பேரிடர் காலங்களை தைரியமாக எதிர்கொள்ள முடியும். இன்றைய சூழலில், புதிதாக வீடு வாங்கிய மக்கள் அதை முறையாக காப்பீடு செய்வது அவசியம். தீ விபத்து, மழை வெள்ளம், திருட்டு, நிலநடுக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், அதன் பாதிப்புகளை சரி செய்ய காப்பீடு திட்டங்கள் பேருதவியாக இருக்கும். தற்போதைய சூழலில், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பல்வேறு வகையான காப்பீடு திட்டங்களை அறிவித்துள்ளன. இத்திட்டங்களில் எது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை தெளிவாக யோசித்து தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக, வீடுகளுக்கான காப்பீடு வசதி செய்யும் போது கட்டடத்துக்கு மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்காமல், வீட்டு உபயோக பொருட்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் வீட்டுக்கு என்னென்ன வகையிலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன என்பது குறித்த அடிப்படை விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும். மழைவெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதி என்றால், அதற்கு ஏற்ப நிவாரணம் கிடைக்கும் வகையிலான காப்பீடு திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக, ஒரு முறை மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டு நிவாரணம் பெற்றவர்கள், அடுத்த ஆண்டும் அதே பாதிப்புகளை எதிர்கொள்ளும் போது நிவாரணம் கிடைக்குமா என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக, நீங்கள் தேர்வு செய்யும் நிறுவனத்தில் காப்பீடு வசதிக்கான கிளைம் வழிமுறைகள் என்ன என்பதை அறிய வேண்டும். காப்பீடு திட்டத்தை தேர்வு செய்யும் நிலையில், அதில் நிவாரணம் பெற மறைமுக கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் பார்த்து அதற்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும். இதில், பிரீமியம் தொகை விஷயத்திலும் மக்கள் கவனமாக முடிவு எடுக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள். ஒரு முறை மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டு நிவாரணம் பெற்றவர்கள், அடுத்த ஆண்டும் அதே பாதிப்புகளை எதிர்கொள்ளும் போது நிவாரணம் கிடைக்குமா என்பதை பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !