உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / கட்டடங்களில் பூச்சு வேலைகளை சுலபமாக்கும் ஜிப்சம் பிளாஸ்டரிங்

கட்டடங்களில் பூச்சு வேலைகளை சுலபமாக்கும் ஜிப்சம் பிளாஸ்டரிங்

க ட்டுமான துறையில் வேலைபாடுகளை சுலபமாக்கும் விதமாக புத்தாக்கமும், நவீன தொழில்நுட்பங்களும் தற்போது புகுத்தப்பட்டு வருகின்றன. இதனால், வேலை நேரம் குறைவதுடன், ஆள் கூலி உள்ளிட்ட செலவினங்களும் சிக்கனப்படுத்தப்படுகின்றன. கட்டுமான பணிகள் முடிந்தவுடன், சுவர் பூச்சு பணிகளுக்கு சற்று நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஏனெனில், பூச்சு வேலையில் நேர்த்தி மிக அவசியம். இல்லையேல் பிற்காலத்தில் வெடிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். கட்டடங்களை மிக வேகமாக கட்டி முடித்துக்கொண்டிருக்கும், காலகட்டத்தில் சுவர் பூச்சு மற்றும் அதற்கு மேல், 'வால்பட்டி' என்று இரு வேலைகளை ஒன்றாக்கும் விதமாக 'ஜிப்சம் பிளாஸ்டரிங்' அமைந்துள்ளது. இதன் வாயிலாக நேரம், பணி ஆட்கள் மற்றும் பொருட்செலவு குறைகிறது. வணிக மற்றும் பொது உபயோக கட்டடங்களுக்கு மிக உகந்தது. நேராக இதன் மேலேயே, 'பெயின்டிங்' செய்யலாம். இதனை உபயோகிப்பதன் வாயிலாக சுவர் பூச்சு செலவில், 35 சதவீதம் வரை சேமிக்கலாம் என்கின்றனர் பொறியாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை