பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து கட்டுமான பொருட்கள் தயாரிப்பு
பிளாஸ்டிக் கழிவுகளையும், கட்டடக்கழிவுகளையும், தொழிற்சாலை கழிவுகளையும், மறுசுழற்சி செய்து, கட்டடங்களுக்கு பயன்படுத்தலாம் என்கிறார், கோயமுத்துார் மாவட்ட அனைத்து கட்டட பொறியாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன்.அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
நாள்தோறும் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் எங்கும் காண முடிகிறது. சிப்ஸ் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மருந்து கவர்கள், பிளாஸ்டிக் பைகள், பால் கவர்கள் போன்ற ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை, தினந்தோறும் குப்பைகளாக வெளியேற்றுகிறோம்.இக்கழிவுகள் இருந்து கட்டுமானங்களுக்கு தேவையான கற்களையும், கதவு ஜன்னல் போன்றவைகள் தயாரிப்பதற்காக பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தலாம்.n பிளாஸ்டிக் கழிவுகளை உருக்கி, பிளாக்குகளாக செய்து தளம் அமைத்துக் கொள்ளலாம். நடைபாதை மற்றும் பார்க்கிங் கற்களாக பயன்படுத்தலாம். சுவர் பேனல்களாகவும், சீலிங் பேனல்கள் ஆகவும் உருவாக்கி பயன்படுத்தலாம். பழைய கட்டுமானங்களை இடிக்கும் பொழுது இரும்பு, மரம், பிளாஸ்டிக் போன்றவைகளை மறுசுழற்சி செய்து கொள்கிறார்கள். ஆனால், கட்டடக்கழிவுகளை அகற்றுவது சவாலாக உள்ளது. கட்டடக் கழிவுகளை குளங்களிலும் குட்டைகளிலும், நீர்நிலைகளிலும் கொட்டிச் செல்கிறார்கள். இது சுற்றுச்சூழலையும் நீர் நிலைகளையும் மிகவும் பாதிக்கின்றது. இப்படி தேவையில்லாத இடங்களில், கட்டடக் கழிவுகளை கொட்டுவதற்கு பதிலாக அதை உபயோகமாக பயன்படுத்தலாம்.n கட்டடக்கழிவுகளை அரைத்து, பேஸ்மென்ட் பில்லிங் போன்றவற்றுக்கும், சாலைப் பணிகளுக்கும் பயன்படுத்தலாம்.n அஸ்திவாரங்களுக்கு கருங்கலுக்கு பதிலாக போர்டு எர்த் என, இன்னும் தற்சார்பு கட்டுமான முறையில் அஸ்திவாரங்கள் இடலாம். இதனால் கட்டடங்களின் செலவு குறையும்.n கருங்கற்களையும், செங்கற்களையும் சுத்தம் செய்து, மறு பயன்பாட்டிற்கு எடுக்கலாம்.* பழைய ஜன்னல் கதவுகளை, அப்படியே புதிய வீட்டுக்கு பயன்படுத்தலாம். துாண்கள், விட்டங்களை சரி செய்து வீட்டுக்கு அழகு சேர்க்கலாம்.n இரும்பு உருக்காலைகளில் வெளியேற்றப்படும் உருக்கு 'ஸ்லேக்' எனப்படும் துகள்களை சிமென்ட் தயாரிப்புக்கு பயன்படுத்துகிறார்கள்.n நிலக்கரி சாம்பலையும் சிமென்ட், பிளை ஆஷ் பிரிக்ஸ், மேலும் பல கட்டுமான பொருட்களை தயாரிப்பதற்காக பயன்படுத்துகிறார்கள். இதனால் கடலில் கொட்டப்படும் கழிவுகள் தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு கட்டுமான பொருள்களை உருவாக்கி பயன்படுத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.