உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / மழை காலம் துவங்கியாச்சு... கட்டட விரிசலில் கவனம்; அஸ்திவாரத்துக்கு ஆபத்து ஏற்படுவதை தவிர்க்க டிப்ஸ்

மழை காலம் துவங்கியாச்சு... கட்டட விரிசலில் கவனம்; அஸ்திவாரத்துக்கு ஆபத்து ஏற்படுவதை தவிர்க்க டிப்ஸ்

தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளது. மழை தீவிரம் அடைவதற்கு முன்பு கட்டடங்களில் மொட்டை மாடியில் உள்ள விரிசல்கள், அங்கு பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ்களில், ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என, சோதனை செய்ய வேண்டும்.கைப்பிடி சுவர் மற்றும் 'சன் சேடு', மொட்டை மாடி தளங்களில் சில வெடிப்புகள் போன்று ஏற்பட்டிருந்தால் அந்த விரிசல்களில், மழை நீர் கசிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும்.கட்டடத்தை சுற்றிலும், மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சுற்றிலும் உள்ள தளங்கள் அல்லது டைல்ஸ் தளங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், உடனடியாக அவற்றை சரி செய்துகொள்ள வேண்டும். இல்லையேல் அஸ்திவாரத்தை பாதிக்கும் என்கின்றனர் பொறியாளர்கள்.கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன் கூறியதாவது:கட்டடத்தில் அமைந்துள்ள 'சுவிட்ச்' உள்ளிட்ட, மின்சாதன பொருட்களில் ஏதேனும் மின்கசிவு ஏற்படுகிறதா என்பதை சரிபார்த்து, உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும்.எர்த் பிட்' சரியாக வேலை செய்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்; கட்டாயம் 'எர்த் பிட்' அமைக்க வேண்டும்.பெரும்பாலும் மின் மீட்டர் இணைப்பை, கட்டடத்திற்கு வெளியில் தான் அமைத்திருப்போம். அவற்றில் மழை நீர் உட்புகாதவாறு சரி செய்து கொள்ள வேண்டும்.கழிவு நீர் செல்லும் குழாய், சேம்பர் மூடிகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும்.செடிகளோ, மரங்களின் வேர்களோ இந்த பைப்களில் அடைத்திருக்க வாய்ப்புள்ளது. செப்டிக் டேங்க் மற்றும் வாட்டர் டேங்க் அருகில் செடிகளோ, மரங்களோ இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும். அவை சுவர்களில் விரிசல் ஏற்படுத்தி, மழைநீர் உட்புகும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.'ஆஸ்பெட்டாஸ் ஷீட்' மற்றும் 'அலுமினியம் ஷீட்' போன்றவற்றில் நாம் கூரை அமைத்திருந்தாலும் அவற்றில் நீர்க்கசிவு ஏற்படும். அவற்றையும் உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பூகம்பம் தடுக்கலாம்'

''நில அதிர்வு அதாவது பூகம்பம் போன்றவை ஏற்படுவதற்கு, நிலத்தடி நீர்மட்டம் குறைவது முக்கிய காரணம்.அவற்றை தடுக்க அவசியம், அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். கட்டடத்தின் பரப்பளவிற்கு ஏற்ப, மழை நீர் சேமிக்கும் அமைப்பினை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மழை நீரை சேமித்து வைப்பதால், நில அதிர்வை மட்டுமல்லாமல், கோடை காலங்களில், நீர் பற்றாக்குறையையும் தடுக்கலாம்,'' என்றார் ஜெகதீஸ்வரன் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ