உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / கட்டடத்தின் ஆயுளை அரிக்கும் உப்புக்காற்று

கட்டடத்தின் ஆயுளை அரிக்கும் உப்புக்காற்று

பொ துவாக உப்புக்காற்று வீசக்கூடிய பகுதியில், அதாவது கடல் பகுதியில் கட்டடம் கட்டும்போது, கட்டடத்திற்கு பயன்படுத்தும் தண்ணீரை, பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார், 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ். அவர் கூறியதாவது: கட்டுமான கம்பி பாதிக்கப்படாத வண்ணம், ரசாயன கலவை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தப்படும் அனைத்து கம்பிகளையும், தரமான கம்பியாக பயன்படுத்தி, கம்பிக்கு தேவையான ரசாயன கலவையை பூசுவதன் வாயிலாக, கட்டடத்தின் ஆயுட்காலத்தை மேம்படுத்தலாம். கான்கிரீட் இடும்போது, ரூப் சிலாப் கான்கிரீட் மற்றும் பில்லர் பீம்களுக்கு கான்கிரீட் இடும்பொழுது அவற்றுக்கு தேவையான ஆட் மிக்சர்கள் உள்ளன. அவற்றை முறையாக பயன்படுத்துவதன் வாயிலாக கான் கிரீட்டின் வலுவையும், ஆயுட்காலத்தையும் நீட்டிக்கலாம். இவற்றை எல்லாம் விட மிக முக்கியமானது, வெளிப்புற பெயின்டிங். பெயின்டை தேர்ந்தெடுக்கும்போது, அது நீண்ட ஆயுட்காலம் உடையதாக இருக்க வேண்டும். உப்புக்காற்றால் அரிக்கப்படாத கோட்டிங்குகள் வந்துள்ளன. பெயின்டில் ரசாயன கலவைகளையும், தேவையான அளவுக்கு 'அட்மிக்ஸர்'களையும் இட்டு நல்ல பெயின்ட் அடிப்பதன் வாயிலாக, ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். இத்தகைய கட்டடத்திற்கு பராமரிப்பு முக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ