டைல்ஸ் பொருத்திய பின் வெற்றிடம் சோதிக்க வேண்டும்
டை ல்ஸ் ஸ்டாண்டர்டு, கமர்சியல், யூட்டிலிட்டி, எகானமி ஆகிய வகைகளில் ஒவ்வொன்றின் அளவுகளுக்கேற்ப, தரத்தை பொறுத்து சதுர அடி அடிப்படையில், விலைகள் மாறுகின்றன. டைல்ஸ் தரம் எப்படியிருந்தாலும் சரி என நினைக்கக்கூடாது. புகழ்பெற்ற பிராண்ட் மற்றும் நிறுவனங்களின் தரமான டைல்ஸ் வாங்க வேண்டும். டைல்ஸ் பதிக்கும்போது, முனைகள் உடைந்திருக்கவோ, வளைந்தோ அல்லது விரிசல் ஏற்பட்டிருக்கவோ கூடாது. டைல்ஸ் உறுதியை பரிசோதிக்க, அவற்றின் 'குரூப்' எண்ணை கண்டறிய வேண்டும். உறுதியை பொறுத்தவரை மூன்று 'குரூப்'களாக, 3, 4, 5 ஆக கிடைக்கின்றன. இவற்றை பொருத்தும் முன், குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் அவற்றை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பொருத்துவதற்கான டைல்சை 'கட்' செய்ய வேண்டி இருந்தால், 'டைல் கட்டர்' பயன்படுத்த வேண்டும். ஒரு பகுதியில் இருந்து டைல்ஸ் பொருத்த தொடங்க வேண்டும். கட் செய்யப்பட்ட டைல்சை கதவுகளின் பக்கவாட்டில் பொருத்த வேண்டும். பொருத்திய பின் இடைவெளியில், ஒயிட் சிமென்ட்டால் நிரப்ப வேண்டும். டைல்ஸ் பரப்புகளில் ஒட்டிக்கொண்டுள்ள சிமென்ட்டை, உடன டியாக ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும். டைல்ஸ் பொருத்திய பரப்பில், தொடர்ந்து ஏழு நாட்கள் கியூரிங் செய்வது அவசியம். அவை பொருத்தப்பட்ட மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு பின்பு, ஓர் மரப்பலகையால் அவற்றின்மீது மெல்லத்தட்டி, நன்றாக பொருந்தி உள்ளதா என பார்க்க வேண்டும். வெற்றிடமாக இருப்பது போன்ற சத்தம் எதுவும் கேட்கக்கூடாது. அப்படி சத்தம் ஏற்படின், உடனடியாக சரி செய்ய வேண்டும். இதனால், எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார ரீதியான பிரச்னைகளை தடுக்க முடியும் என்கிறார், 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.