உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / குடிநீர் குழாய் அமைக்கும் போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்

குடிநீர் குழாய் அமைக்கும் போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்

ஒரு வீட்டின் குடிநீர் வினியோகம் என்பது மிகவும் முக்கியமானது. அதில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் அதை சீர் செய்யும் வரை ஒரே பிரச்னைதான். அதற்கு முக்கியமானது 'பிளம்பிங்' வேலை.'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ் கூறியதாவது: குடிநீர் மற்றும் போர்வெல் தண்ணீரின் தேவையை அறிந்து, அதற்கேற்ப திட்டமிட்டு செய்ய வேண்டும். தேவைக்கு அதிகமாக ஒன்று அல்லது இரண்டு அங்குல குழாய்கள் அமைத்தால் காற்றுத்தடை ஏற்படலாம்.ஒவ்வொரு வீட்டுக்கும் தனியாக குழாய்களை, மேல்நிலை தொட்டியில் இருந்து அமைக்க வேண்டும். கழிவுநீர் குழாய்கள் அருகே, குடிநீர் குழாய் கூடாது. பிரதான குழாய்களில், 'ரெடியூசர்' மற்றும் 'பெண்ட்'கள் அமைக்கும்போது, குறுகிய திருப்பங்களை தவிர்க்க வேண்டும். லாங்க் ரெடியூசர், பெண்ட்களை பயன்படுத்த வேண்டும்.'பாய்லர்' மற்றும் இயந்திரங்களுக்கு தேவைப்படும், 'சர்க்குலேடிங் வாட்டர்' குழாய்களை, நேரடியாக தெரு பிரதான குழாய்களில் இணைக்கக்கூடாது. தொட்டிகள் அமைத்து அதில்தான் இணைக்க வேண்டும். வீட்டிற்கு வெளியே அமைக்கும் வினியோக குழாய்களின் கடைசி பகுதிகளை, அப்படியே விட்டு விடாமல், 'டெயில் எண்ட்' குழாய்களுடன் இணைக்க வேண்டும். கூடுமான வரை, மின் இணைப்பு அருகே குழாய் அமைக்கக்கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை