உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / கட்டடத்தின் உறுதி கூறும் டி.எம்.டி.,கம்பி; தரமான கம்பியை எப்படி தேர்வு செய்வது

கட்டடத்தின் உறுதி கூறும் டி.எம்.டி.,கம்பி; தரமான கம்பியை எப்படி தேர்வு செய்வது

ஒரு கட்டடத்தின் வலிமையை பொறுத்து ஆயுள் அமையும். எனவே, கட்டுமான பொருட்களின் தரத்தில் கவனமாக இருப்பது அவசியமாகிறது. டி.எம்.டி., கம்பிகள் என்பது, ஒரு கட்டடத்தின் முதுகெலும்பாக அமைகிறது.எனவே, புதிய வீடு கட்டும் பொழுது டி.எம்.டி., கம்பிகள் தரம் மிக முக்கியமானது. இன்றைய சந்தையில் பல வகையான டி.எம்.டி., கம்பிகள் கிடைப்பதால், சரியானதை தேர்ந்தெடுப்பது சற்று கடினமாக இருக்கலாம்.தரமான டி.எம்.டி., கம்பியை அடையாளம் காண, ஐ.எஸ்.ஐ., குறியீடு அனைத்து டி.எம்.டி., கம்பிகளிலும் அச்சடிக்கப்பட்டு இருக்கும். இது கம்பி தரத்திற்கான, அரசாங்கம் அங்கீகாரமாகும்.Fe 500, Fe 550D போன்ற வலிமை குறியீடுகள், கம்பியின் வலிமையை குறிக்கும். வீட்டின் அமைப்புக்கு ஏற்ப, வலிமை கொண்ட கம்பியை தேர்ந்தெடுக்க வேண்டும். 'D' என்ற குறியீடு இழுவை திறனை குறைக்கும்.இது கம்பியின் நெகிழ்வு தன்மையை குறைக்கிறது. நம்பகமான தயாரிப்பாளர்களின் கம்பியை தேர்ந்தெடுக்க வேண்டும்.குறைந்த விலையில் கிடைக்கும் கம்பிகளின் தரம் சற்று குறைவாக இருக்கும். எனவே, குறைந்த விலையை நம்பி ஏமார்ந்து விடவும் கூடாது.தரமான கம்பியின் மேற்பரப்பு மென்மையாகவும், எந்த விதமான குறைபாடுகளும் இல்லாமலும் இருக்கும். ஒரு சிறிய துண்டை எடுத்து வளைத்துப் பார்த்தால், எளிதில் உடைந்தால் அது தரமான கம்பி அல்ல. ஒரு நல்ல பொறியாளரை அணுகி அவருடைய ஆலோசனையைப்பெற்று உபயோகிக்கலாம்.இல்லையேல், எதிர்காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி, தேவையற்ற பொருட்செலவு மட்டுமின்றி மனரீதியான பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.குறிப்பிட்ட 'பட்ஜெட்'டில், வீட்டை கட்டுவதற்காக கட்டுமான பொருட்களின் தரத்தில், சமரசம் செய்யக்கூடாது என்கின்றனர் பொறியாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ