உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / கட்டுமானத்தில் இயந்திரங்களின் பயன்பாடு; பொறியாளர் அலர்ட்

கட்டுமானத்தில் இயந்திரங்களின் பயன்பாடு; பொறியாளர் அலர்ட்

ச மீபகாலமாக கட்டுமானத் துறையில் இயந்திரங்கள் பயன்படுத்தும்போது, கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விவரிக்கிறார், கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்ஜெயப்பிரகாஷ். n பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு அஸ்திவாரம் தோண்டும் பொழுது, அருகாமையில் உள்ள சுற்றுச்சுவர் அல்லது கட்டடங்களின் அஸ்திவாரம் மற்றும் கட்டடத்தின் உறுதித்தன்மை ஆகியவை கவனத்தில் கொண்டு, பணிகளை தொடங்க வேண்டும். n சிறு இயந்திரங்களை பயன்படுத்தும் பொழுது, இயந்திரங்களை இயக்கும் நபர் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். அனுபவம் இல்லாத நபர்களுக்கு, குறைந்தபட்சம் ஒரு வாரம் பயிற்சி அளிக்க வேண்டும். n இயந்திரங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கும் முன்பு, ஒயர்களில் ஏதேனும் பழுது உள்ளதா என்பதை முழுமையாக சோதித்த பின்பே, வேலையை தொடங்க வேண்டும். தற்பொழுது உயரமான கட்டடங்களில் கிரேன் மற்றும் லிப்ட் பயன்பாடு பரவலாக உள்ளது. n கிரேன் பயன்படுத்தும் பொழுது, அருகிலுள்ளமின் ஒயர்களில் படாமல் பார்த்து இயக்க வேண்டும். கிரேன் மற்றும் லிப்டுகளில் அனுமதிக்கப்பட்ட பாரத்தை மட்டுமே ஏற்ற வேண்டும். லிப்டுகளை முறையாக பராமரிக்க வேண்டும். n பழைய கட்டடங்களை இடிக்கும்பொழுது, முதலில் 'ஸ்லாப்' மற்றும் பீம்களை அகற்றிவிட்டு பிறகு சுவற்றை இடிக்க வேண்டும். இடிக்கும் வேலையை தொடங்கும் முன், உரிய சப்போர்ட் கொடுத்து விட்டு, தொடங்க வேண்டும். n இடிக்கும் பொழுது கீழே எந்த நபர்களும் வராமல் இருக்க, பாதுகாப்பு கயிறுகளை முறையாக கட்ட வேண்டும். இயந்திரங்களுடன் இணைக்கும் டூல்ஸ் பிளேடு மற்றும் ராடுகள் தரமானதாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி