நாட்டை பாதுகாக்கும் வீரர்களுக்கு சுலபத்தவணையில் சொந்த வீடு!
ராணுவம், போலீசார் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, சுலப தவணையில் சொந்த வீடு வழங்குகிறார், சூலுாரை சேர்ந்த சரஸ்வதி ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன்.அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:கடந்த, 25 ஆண்டுகளில், 10 'லே-அவுட்' திட்டங்களை முடித்துள்ளோம். முன்பு 'விற்றோம் சென்றோம்' என்று இருந்தோம். எந்த தொழிலிலும், சேவை மனப்பான்மை இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். எனது மன திருப்திக்காக படிக்கும் குழந்தைகள், நோயாளிகளுக்கும் இயன்ற உதவி செய்கிறேன்.இச்சூழலில், நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கு, உதவிகள் செய்ய நினைத்தேன். இவர்களுக்கு சுலபத்தவணை முறையில், சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.இதற்கென, கரடிவாவி கிராமத்தில் டி.ஆர்.சி., ராயல் சிட்டியில், 'பேவர் பிளாக்' கற்கள் பதித்த ரோடு, கான்கிரீட் சாக்கடை, குடிநீர், உப்புத்தண்ணீர் என, அனைத்து வசதிகளும் கொண்ட வீட்டு மனைகளை, குறைந்த விலையில் வழங்குகிறோம்.இங்கு, 5.5 ஏக்கரில், 133 வீட்டு மனைகள் இடம்பெற்றுள்ளன. இதில், இரண்டே முக்கால் சென்ட் அளவில், ஒரு 'சைட்' இருக்கும். ஒரு சென்ட் ரூ.4 லட்சம் வீதம், வங்கிக் கடன் பெற்றும் சுலபத்தவணையில் தருகிறோம். முக்கிய சலுகையாக, மனை விற்கும் விலைக்கே கிரையம் செய்து தருகிறோம்.கிரைய செலவுக்கான பொறுப்பையும் நானே ஏற்கிறேன். வீடு கட்டித்தர கோரினால், அவர்கள் விரும்பும் வங்கிகளில் வங்கிக்கடன் ஏற்பாடு தருகிறோம். விபரங்களுக்கு, 88700 08325 என்ற எண்ணில் என்னை தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.