உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / ரோட்டை ஒட்டி வீடு கட்டும் முன் கவனம்: அகலத்துக்கு ஏற்ப திறவிடம் விடுவது அவசியம்

ரோட்டை ஒட்டி வீடு கட்டும் முன் கவனம்: அகலத்துக்கு ஏற்ப திறவிடம் விடுவது அவசியம்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், வாகன ஓட்டிகள் வசதிக்காகவும் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல், ரோட்டின் உயரமும் அதிகரித்து வருகிறது. இதனால், ஏற்கனவே வீடு கட்டிய இடங்களில் ரோடு மேலேயும், வீட்டின் நுழைவாயில் தாழ்வாகவும் மாறுவதை காண முடிகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, திட்டமிட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், பராமரிப்பு பணிகளுக்கு செலவளிக்க நேரிடும் என்கிறார், பதிவு பெற்ற பொறியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கனகசுந்தரம். அவர் மேலும் கூறியதாவது: 'பேஸ்மென்ட்' உயரம் சாலையைவிட, மூன்று அடி மேல் இருக்குமாறு கட்ட வேண்டும். சைட்டும், சாலையும் ஒரே நிலையில் இருந்தால், பேஸ்மென்ட் அமைக்க ஆகும் செலவு குறையும். சைட்டின் சுற்றுப்புறத்தில் மாசு, ஒலி பாதிப்பு ஏற்படும் வகையில் தொழிற்சாலை இயங்கினால் அதை கவனிக்க வேண்டும்.ஆள் துளை கிணற்று நீரின் கடினத்தன்மை எவ்வளவு என அறிந்துகொள்ள வேண்டும். 1,000 'பார்ட்ஸ் பெர் மில்லியன்'(பி.பி.எம்.,) கீழ் இருந்தால் நல்லது. கட்டுமானத்திற்கு நீர் எப்படி கிடைக்கும் என்பதை கண்டறிய வேண்டும். தேவையிருப்பின், தனியாக ஆழ்துளை கிணறு அமைக்கலாம். நீர்வழிப்பாதை அருகில் இருந்தால் எந்த கழிவும் அதில் விட கூடாது. சாலையின் அகலம் 9 மீ.,(30 அடி ) வரை இருந்தால் கட்டடத்தின் முன்புறம், 1.5 மீ., காலியிடம் விட வேண்டும். அதுவே, 10 மீ., (33 அடி ) எனில், 3 மீ., விட வேண்டும். அதேபோல் சைட் அகலம், 9 மீ., வரை இருப்பின் ஒரு பக்கம் மட்டுமே, 1 மீ., திறவிடம் போதுமானது. இல்லையெனில் இரு பக்கமும் விட வேண்டும். இவற்றை மனதில் கொண்டு சைட் தீர்மானிக்கலாம். அரசு அனுமதி முறையாக உள்ளதா என, திட்ட அனுமதி, உள்ளாட்சி அனுமதி, அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் ஆகியவற்றை, விற்பவரிடமிருந்து பெற்று சரி பார்த்தல் அவசியம். இவைகளை, tcp.tn.gov.in, rera.tn.gov.inஇணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து சரி பார்க்கலாம். விற்பனை செய்பவரின் சொத்து பத்திரத்தின் நகலை, tnreginet.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்று, சரி பார்க்கலாம். ஒரு பதிவு பெற்ற பொறியாளர் மற்றும் வழக்கறிஞரை அணுகி, கருத்துரை பெறுவது நல்லது. வீடு கட்ட அனுமதி பெறுவதில், ஏதேனும் சங்கடம் இருந்தால் பொறியாளர் அதை கண்டு சரியான அறிவுரை வழங்குவார். அனுமதி பெற்ற வரைபடத்தின் படி, கட்டடம் கட்ட முடிவெடுத்து அதை நோக்கி பயணிப்பின் சாலச்சிறந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை