உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / துாண்களில் கான்கிரீட் போடும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

துாண்களில் கான்கிரீட் போடும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

ஒ ரு கட்டடம் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அதன் அஸ்திவாரம், துாண்கள், பீம்கள் ஆகியவை தரமான முறையில் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, துாண்கள் அமைக்கும் விஷயத்தில் தொழில்நுட்ப ரீதியாக எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று மக்கள் ஒதுங்கி செல்வது தான் பல்வேறு குறைபாடுகள் வர காரணமாக அமைந்துவிடுகிறது. எதார்த்த நிலையில் பார்த்தால், ஒரு நபர் தனக்கான வீட்டை கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவு. இந்த முடிவை செல்படுத்தும் நிலையில் பல்வேறு விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைபடத்தில் குறிப்பிட்டபடி, துாண்கள் எந்தெந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதை துல்லியமாக அடையாளப் படுத்த வேண்டும். அதன்பின் அங்கு அஸ்தி வாரத்துக்கான பள்ளம் தோண்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். புதிய கட்டடத்துக்கான அஸ்திவாரம் அமைக்க வேண்டிய இடங்களை அடையாளப்படுத்தும் போது, நேர் வரிசையில் அமைந்துள்ளதா என்பதை மக்கள் கவனிக்கின்றனர். இத்துடன் குறுக்கு வரிசையிலும் துாண்கள் அமையும் இடங்கள் சரியாக உள்ளதா என்று பாருங்கள். இதில், அஸ்திவாரத்துக்கான பள்ளம் தோண்டும் பணிகள் விஷயத்திலும் உரிமையாளர்கள் மிக கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக, அடித்தள பணிகள் முடிந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக நிறுத்தப்படும் கம்பி கூடுகள் நேராக நிற்க வேண்டியது அவசியம். துாண்களுக்கான கம்பி கூடுகள் முறையாக, நேராக நிறுத்தப்படுவதை உறுதி செய்ய உரிய தடுப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இது மட்டுமல்லாது, அஸ்திவார பள்ளத்தில், இருப்பு துாண் களுக்கான கான்கிரீட் கொட்டப்படும் இடத்தை சுற்றி தடுப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். காலம் பாக்ஸ்' என்று குறிப்பிடப்படும் இந்த அமைப்புகளை ஏற்படுத்தும் போது, அதனுள் கொட்டப்படும் கான்கிரீட் முழுமையாக அனைத்து இடங்களுக்கும் பரவ வேண்டியது அவசியம். அத்துடன் கான்கிரீட் கொட்டி, குத்தப்படும் நிலையில் அது வெளியில் பிதுங்கி சென்றுவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதற்கு காலம் பாக்ஸ் தடுப்பு ஏற்படுத்தும் நிலையில் உரிய முறையில் வெளிப்புறத்தில் இறுக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இரும்பு உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட காலம் பாக்ஸ் கிடைத்தால் அதை பொருத்தும் நிலையில் கொடுக்கப்பட்ட போல்ட்களை முறையாக டைட் செய்ய வேண்டும். இதில் மிக கவனமாக செயல்பட்டால் மட்டுமே உங்கள் வீட்டுக்கான துாண்கள் தரத்தை உறுதி செய்ய முடியும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை