உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை /  குளிர்காலத்தில் கட்டடம் கட்டுவோர் ஜாக்கிரதை; வெப்பநிலையை தக்க வைக்கும் கான்கிரீட்

 குளிர்காலத்தில் கட்டடம் கட்டுவோர் ஜாக்கிரதை; வெப்பநிலையை தக்க வைக்கும் கான்கிரீட்

கா ன்கிரீட் என்பது கட்டடத்தின் ஆயுளை நிர்ணயிக்கிறது. குறிப்பாக, வெப்ப நிலையை பொறுத்து 'கான்கிரீட்' இறுக்கம் ஏற்படுகிறது. எனவே, வெயில் காலத்திலும், குளிர் காலத்திலும் கான்கிரீட் செலுத்துவதிலும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது குளிர்காலமாக உள்ளது. இந்நிலையில், குளிர்காலத்தில் கான்கிரீட் இடுவதற்கு முன்பு குறைந்தபட்ச வெப்பநிலை, அந்த நாளில் எதுவரை செல்லும் என்கிற துல்லிய தகவல்களை அறிந்துகொள்ள வேண்டும். கான்கிரீட் இடும் பரப்பின் நீளம், அகலம், எத்தனை 'கியூபிக் கான்கிரீட்' இடப்பட வேண்டும். முக்கியமாக எத்தனை மணிக்கு கான்கிரீட் இடும் வேலை முடிக்க போகிறோம் என்பதை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். குளிரான நேரத்தில் கான்கிரீட் இடப்போகிறோம் என்பதால், வேலை தங்கு தடையில்லாமல் துவங்கி முடிய வேண்டும். பணியிடங்கள் அதிகமாக பனிப்பொழிவு இருக்கிறதா என உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். தளத்தில் இடும் கான்கிரீட்டின் வெப்பநிலை, சுற்றுப்புற சூழலின் வெப்பநிலை என்ன என்பதை மணிக்கு ஒரு முறை குறித்துக்கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் கான்கிரீட் கலவை கலக்கும்போது தண்ணீரை வழக்கத்தைவிட, குறைவாக பயன்படுத்த வேண்டும். அதிகமாக பயன்படுத்தினால், கலவை தண்ணீர் அதிகரித்து பிற்காலத்தில் கட்டுமானத்தில் விரிசல் விழும். மிகக்குளிர்ந்த நீரில் கலவையை கலத்தல் கூடாது. பணியிடத்தில் வசதி இருந்தால் கலவையில் பயன்படுத்தும் தண்ணீரை சூடேற்றி(40 டிகிரி செல்சியஸ் வரை) தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். கூடுமானவரை கான்கிரீட் தயாரிக்கும் இடமும், கான்கிரீட் ஊற்றும் இடமும் அருகருகே இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கான துாரம் அதிகமாக இருக்கும்போது, கான்கிரீட்டின் தன்மை மாறும் வாய்ப்புள்ளது. தற்போது, கான்கிரீட் கலவையை, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் தக்க வைத்துக்கொள்ள சில கான்கிரீட் இடுபொருட்கள் வந்துள்ளன. வண்ணம் ஊட்டப்பட்ட கான்கிரீட்டை தயாரிக்கும்போது, வழக்கமான அளவைவிட வண்ணத்தின் அளவு, 5 சதவீதம் அளவு குறைவாக இருக்க வேண்டும். கோடை காலங்களில் கான்கிரீட் இடும்போது வண்ணத்தின் அளவு, 5 சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும். கான்கிரீட் இட்ட பிறகு, அதன் ஈரத்தன்மையை சோதித்து அறிய வேண்டும். அதன் மேற்பரப்பில் வந்து நிற்கும் தண்ணீரின் தன்மையை பொறுத்து, நாம் 'கியூரிங்' வேலை யை துவங்க வேண்டும். குளிர் பிரதேசங்களில் குளிர் காலங்களில் சற்று தாமதமாகத்தான் நீரேற்றுதலை துவங்க வேண்டும். முட்டுக்கொடுப்பு பலகைகளையும் பிரித்தெடுப்பதில் அவசரம் கூடாது. வழக்கத்தை விட ஐந்து முதல் எட்டு நாட்களே அதிகமாக, 'பிராசஸிங் டைம்' கொடுக்க வேண்டும் என்கின்றனர் பொறியாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி