லிவிங் ரூம் எனும் வீட்டின் கூடம் தான் வீட்டிற்கு வருபவர்களுக்கு நாம் முன்வைக்கும் முகம். குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்து உங்களின் சிறந்த நினைவுகள் உருவாக்கப்படும் லைவ்லியான இடமும் இது தான். அதை அலங்கரிப்பது உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் இடத்தை ரசனைக்கேற்ப உருவாக்குவது எப்படி, பார்ப்பவர்களை கவரும் வகையில் தோற்றத்தை ஏற்படுத்துவது எப்படி என இங்கே காண்போம்.உங்கள் ஸ்டைலை வகைப்படுத்துங்கள்
அர்த்தமுள்ள ஒரு லிவிங் ரூமை உருவாக்க இது முக்கியம். ஒரே நிறத்தின் டோன்களை விரும்புகிறீர்களா அல்லது வலுவான கான்ட்ராஸ்ட் வண்ணங்களை தேர்வு செய்யப் போகிறீர்களா? போல்ட்டான, வண்ணமயமான போஹிமியான் வைபை தேர்வு செய்யப்போகிறீர்களா? என கேட்டுக்கொள்ளுங்கள். இங்கு போஹிமியான் ஸ்டைல் என்பது அதற்கு ரூல்ஸ் கிடையாது. அழகழகான பொருட்களை அறை முழுவதும் கிடைக்கும் இடத்தில் பொறுத்துவது. மேட்ச் செய்ய வேண்டிய தேவையில்லை. மேலும் ஆர்னேட் எனும் அதிகப்படியான, பூ கொடிகளை டிசைனாக கொண்ட தீமை டிக் அடிக்க நினைக்கிறீர்களா, கிளாசிக்கல் ஸ்டைல் விருப்பமா என முடிவு செய்துகொண்ட அதற்கேற்ற சோபா, நாற்காலி, கார்பெட்களை வாங்கலாம். எனவே என்ன ஸ்டைல்கள் இருக்கின்றன என தெரிந்துகொண்டு உங்கள் பட்ஜெட் மற்றும் ரசனைக்கு ஏற்றதை முடிவு செய்ய வேண்டும்.
இனிய உரையாடலுக்கு சோபாவை தேர்ந்தெடுங்கள்
லிவிங் ரூமில் நுழைந்த உடன் பார்வையாளர்கள் கண்ணில் படும் பகுதி சோபா செட். சோபாவை தேர்வு செய்யும் முன் அறையின் அளவைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். பெரிய லிவிங் ரூமில் 3 சீட்டர் மற்றும் 2 சீட்டர் சோபாக்களையும், தனி நாற்காலிகளையும் போடலாம். சிறிய அறையில் கார்னர் சோபாக்களை போடலாம். அவை இடத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள உதவும். இல்லையெனில் 3 சீட்டர் இருக்கை போதுமானது. உங்கள் சோபா நீங்கள் என்ன ஸ்டைல் தீமை தேர்ந்தெடுத்துள்ளீர்களோ அதற்கேற்ற நிறமாகவோ அல்லது நியூட்ரல் நிறமாகவோ இருக்கலாம். ஏசி லிவிங் ரூமிற்கு லெதர் சோபா ஏற்றதாக இருக்கும். இல்லையெனில் மெமரி போம் கொண்ட மர சோபாக்களை போடலாம். தேன் நிறம், காபி தூள் நிறம் போன்றவை கிளாசியான லுக்காக இருக்கும்.
ஜன்னல்களை திரைச்சீலைகளால் அலங்கரிக்கவும்
ஜன்னலுக்கான கர்டைன்ஸ் வாங்கும் போது பெரிய அறை என்றால் பிரின்ட் செய்யப்பட்ட கர்டைன், அடர் நிற கர்டைன் சிறந்தது. சிறிய அறைக்கு இலகுவான வண்ணங்கள் ஏற்றவை. உங்கள் லிவிங் ரூமிற்குள் சூரிய ஒளி அதிகம் ஊடுருவினால் அது நல்லது தான். இது போன்ற அறை அமையப் பெற்றால் வழக்கமான கர்டைனுக்கு கீழ் மெல்லிய கர்டைன்களை தொங்கவிடலாம். லிவிங் அறையின் ஒட்டுமொத்த வண்ணக் கதையுடன் கர்டைன்கள் பொருந்த வேண்டும். அதற்கு நியூட்ரல் ஷேட்கள் பொருத்தமாக இருக்கும்.
ரசனையை உயர்த்தும் காஃபி மேஜை
உங்களை ரசனைக்குரிய நபர் என காட்டுவதற்கு நீங்கள் காஃபி மேஜை தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். காபி டேபிள் உங்கள் அலங்காரத்தின் மையப் புள்ளி. ஒரு எளிய, சோபா செட்டை அலங்காரமான காஃபி டேபிளுடன் அழகாக்கலாம்.காபி டேபிள் குறைந்தபட்சம் 40 செ.மீ. உயரத்திற்கு இருக்க வேண்டும். அதற்கு கீழ் இருந்தால் தாழ்வாக தெரியும். காஃபி டேபிளின் மத்தியில் அழகான வண்ணப் பூக்கள் கொண்ட செராமிக் பவுல் போன்றவற்றை வைத்தால் இன்னும் அழகு கூடும்.
கலர்ஃபுல் தரைவிரிப்புகள்
ஒரு அறைக்குள் வித்தியாசத்தைக் காட்ட தரை விரிப்புகள் சிறந்த வழி. லிவிங் ரூமில் விரிப்புகளை இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். ஒன்று ஒரு பெரிய விரிப்பை வாங்கி அதன் மீது காபி டேபிள், பக்க மேஜை, சோபாவிலிருந்து கால் வைக்கும் இடம் என முழுமையாக கவர் செய்யலாம். அல்லது காபி டேபிளை வைக்கும் அளவிற்கான சதுரமான தரைவிரிப்பு. சமையலறையில் நடமாடும் இடத்தில் மட்டும் விரிப்புகளை போடலாம்.
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு
இப்போது உங்கள் அறை முழுமையாக அலங்கரிக்கப்பட்டுவிட்டதா என்றால் இல்லை. சின்னஞ்சிறு விஷயங்களில் இப்போது கவனம் செலுத்துங்கள். லிவிங் ரூமின் விசாலமான அறையில் ரோக்சி போட்டோ பிரேம் எனும் படிப்படியான அளவுகளில் 5, 6 பிரேம்களாக வருவனவற்றை வாங்கி அழகாக மாட்டலாம். கலை நயமான சுவரில் மாட்டும் ஹோல்டர்கள் உள்ளன. அதனை தேர்வு செய்யலாம். தொங்கும் டிஸ்கோ பால் பூந்தொட்டி, கலர்ஃபுல்லான சிறு பூ ஜாடிகள், மாற்றக்கூடிய வால்பேப்பர்கள் என அசத்தலாம்.